தைலேக் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தைலேக் மாவட்டம் (Dailekh District) (நேபாளி: दैलेख जिल्ला;ⓘ) மத்திய மேற்கு நேபாளம் நாட்டின், கர்ணாலி மாகாணத்தில் அமைந்த பத்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் பேரி மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் நாராயண் நகராட்சி ஆகும்.

தைலேக் மாவட்டம் 1,502 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 2,61,770 ஆகும்.[1]நேபாள மொழி இம்மாவட்ட மக்களால் அதிகம் பேசப்படுகிறது.
Remove ads
மீத்தேன் எரிவாயு கண்டுபிடிப்பு
இம்மாவட்டத்தின் பைரவி கிராமிய நகராட்சியில் உள்ள ஜல்ஜலே கிராமத்தில் நேபாளத்தின் சுரங்கம் & புவியியல் துறையினரின் மேற்பார்வையில், சீனாவின் புவியியலாளர்கள் 1.12 பில்லியன் கன மீட்டர் மீத்தேன் இயற்கை எரிவாயு இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.[2][3]
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
இமயமலையில் அமைந்துள்ள இம்மாவட்டம் நான்கு வகைப்பட்ட உயரங்களில் அமைந்துள்ளதால், மாவட்டத்தின் தட்ப வெப்பம் அதற்கேற்ப மாறுபடுகிறது.7
Remove ads
கிராம வளர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சி மன்றங்கள்

இம்மாவட்டம் ஒரு நகராட்சியும், 57 கிராம வளர்ச்சி மன்றங்களையும் கொண்டுள்ளது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads