பைரவி கிராமிய நகராட்சி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பைரவி கிராமிய நகராட்சி (Bhairabi Rural Municipality (நேபாள மொழி|भैरवी गाउँपालिका), நேபாளம் நாட்டின் கர்ணாலி மாகாணத்தில் உள்ள தைலேக் மாவட்டத்தில் அமைந்த ஒரு கிராமிய நகராட்சி மன்றம் ஆகும்.[1] இது மாவட்டத் தலைமையிடமான நாராயண் நகருக்கு வடமேற்கே 27.8 கிலோமீட்டர் தொலைவிலும்; கர்ணாலி மாகாணத் தலைநகரான விரேந்திரநகருக்கு வடக்கே 92.5 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இது இமயமலையில் 1359 மீட்டர் உயரத்தில் உள்ளது.

விரைவான உண்மைகள் பைரவி கிராமிய நகராட்சி भैरवी गाउँपालिका, நாடு ...
Remove ads

மக்கள் தொகை பரம்பல்

2011 நேபாள மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 7 வார்டுகளும்[2], 110.46 சதுர கிலோமீட்டர் பரப்பளவும்.[3] கொண்ட பைரவி கிராமிய நகராட்சியின் மக்கள் தொகை 21,233 ஆகும். இக்கிராமிய நகராட்சியில் நேபாள மொழி 98.6%, குரூங் மொழி 1.1% மற்றும் பிற மொழிகள் 0.1% பேரும் பேசுகின்றனர்.[4]சேத்திரி மக்கள் 32.3%ம் மலைவாழ் பிராமணர்களான பகுணி மக்கள் 15%, காமி மக்கள் 8%, தாக்கூர்கள் 5%, மகர் மக்கள் 4.7%, சர்க்கி மக்கள் 3.8%, தாமி/தோலி மக்கள் 2.5%, சன்யாசி/தசநாமி மக்கள் 2.3%, குரூங் மக்கள் 1.4% மற்றும் இசுலாமியர்கள் 0.4% வாழ்கின்றனர். [5]

இந்து சமயத்தினர் 97.3%, இசுலாமியர்கள் 1.4%, பௌத்தர்கள் மற்றும் 1.11% கிறித்தவர்கள் 0.2%.வாழ்கின்றனர். [6]சராசரி எழுத்தறிவு 60.6% ஆக உள்ளது.[7]

Remove ads

மீத்தேன் எரிவாயு கண்டுபிடிப்பு

பைரவி கிராமிய நகராட்சியில் உள்ள ஜல்ஜலே கிராமத்தில் நேபாளத்தின் சுரங்கம் & புவியியல் துறையினரின் மேற்பார்வையில் சீனாவின் புவியியலாளர்கள் 1.12 பில்லியன் கன மீட்டர் மீத்தேன் இயற்கை எரிவாயு இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.[8][9]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads