தொகைநிலைச் செய்யுள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தொகைநிலைச் செய்யுள் என்பது ஒருவராலோ அல்லது பலராலோ உரைக்கப்பட்டு பல பாட்டாய் வருவனவும், பொருள், இடம், காலம், தொழில், பாட்டு, அளவு, ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு ஒன்றாகத் தொகுக்கப்பட்டு தொகை எனப்பெயர் பெற்றனவும் ஆகிய செய்யுள்கள் ஆகும். இவற்றுள் ஒருவராலோ பலராலோ இயற்றப்படுவது தொகை என்பது பொதுவான இலக்கணம். பொருள் முதலியவற்றால் ஒத்திருந்து தொகை எனப் பெயர்பெறுவன என்பது சிறப்பிலக்கணம். இவை தவிர பிறவற்றால் தொகை எனப் பெயர் பெறுவனவும் உள்ளன.
Remove ads
சான்று
- திருக்குறள் - ஒருவரால் இயற்றப்பட்டது
- நெடுந்தொகை - பலரால் இயற்றப்பட்டது
- புறநானூறு - (புறம் என்ற பொருள் பற்றி) பொருளால் தொகுக்கப்பட்டது.
- களவழி நாற்பது - இடத்தால் தொகுக்கப்பட்டது.
- கார் நாற்பது - காலத்தால் தொகுக்கப்பட்டது.
- ஐந்திணை ஐம்பது - தொழிலால் தொகுக்கப்பட்டது.
- கலித்தொகை - பாட்டால் தொகுக்கப்பட்டது.
- குறுந்தொகை - அளவால் தொகுக்கப்பட்டது.
- இனியவை நாற்பது - பண்பால் தொகுக்கப்பட்டது.
- திரு அங்க மாலை - சினையால் தொகுக்கப்பட்டது.
இவற்றில் இனியவை நாற்பதும், திருவங்கமலையும் பண்பு, சினை என்ற பிறவற்றால் தொகுக்கப்பட்டதற்கு சான்றாகும்.
Remove ads
உசாத்துணை
தா.ம. வெள்ளைவாரணம் ,'தண்டியலங்காரம், திருப்பனந்தாள் மட வெளியீடு. 1968
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads