ஐந்திணை ஐம்பது
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அகப்பொருள் கூறும் நூல்களுள் ஒன்று ஐந்திணை ஐம்பது. இதை எழுதியவர் மாறன் பொறையனார் என்னும் புலவர். இது கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல் எனக் கருதப்படுகின்றது.
முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என நிலங்களை ஐந்து திணைகளாகப் பிரிப்பது பண்டைத் தமிழர் வழக்கு. அக்காலத் தமிழ் இலக்கியங்களிலும், அவ்விலக்கியங்களில் எடுத்தாளப்படும் விடயங்களுக்குப் பின்னணியாக இத்திணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. சொல்ல விழைந்த கருப்பொருளின் தன்மைகளுக்கேற்ப உருவாக்க வேண்டிய மனநிலைகளுக்குப் பொருத்தமான பின்னணிச் சூழ்நிலைகளை இத் திணைகளில் ஒன்றோ பலவோ வழங்கின.
ஐந்திணை ஐம்பதில், மேற்காட்டிய ஒவ்வொரு திணையின் பின்னணியிலும் பத்துப் பத்துப் பாடல்களாக ஐம்பது பாடல்கள் உள்ளன.
Remove ads
எடுத்துக்காட்டு
பாலைத் திணையைப் பின்னணியாகக் கொண்ட ஒரு பாடல் இது. வாழ்ந்த சூழலின் வசதிகளையும் பசுமையான நினைவுகளையும் விடுத்துக் காதலனுடன் வறண்ட பாலைநிலப் பகுதியூடாகச் செல்கிறாள் தலைவி. பாலை நிலத்துக்கே இயல்பான கடுமை வாட்டும் எனினும் காதல் வயப்பட்ட உள்ளங்களுக்கே இயல்பான விட்டுக்கொடுப்புகள் அவர்களை மேலும் நெருக்கமாக்கும். இக்கருத்தை விளக்கும் இனிய பாடலொன்று இந்நூலில் வருகின்றது.
- சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
- பிணைமான் இனிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்
- கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
- உள்ளம் படர்ந்த நெறி.
ஆணும் பெண்ணுமான இரு மான்கள் (கலைமான், பிணைமான்) பாலை நிலத்து நீர்ச் சுனை ஒன்றின் முன்னே நிற்கின்றன. வறண்டு போன அச்சுனையில் இருக்கும் நீர் இரண்டுக்கும் போதுமானதாக இல்லை. தான் அருந்தாவிட்டால் பெண்மானும் அருந்தாது என்பது ஆண்மானுக்குத் தெரியும். எனவே பெண்மான் அருந்தட்டும் எனத் தான் அருந்துவது போல் பாசாங்கு செய்கிறதாம் ஆண்மான். இதுவே காதல் உள்ளங்களின் ஒழுக்கம் என்கிறார் புலவர்.
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads