த. இராசலிங்கம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தம்பிப்பிள்ளை இராசலிங்கம் (21 நவம்பர் 1933) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

விரைவான உண்மைகள் த. இராசலிங்கம்T. Rasalingamநா.உ., இலங்கை நாடாளுமன்றம் உடுப்பிட்டி ...

இராசலிங்கம் இலங்கையின் வடக்கே வதிரி என்ற கிராமத்தில் 1933 நவம்பர் 21 இல் பிறந்தார்.[1] இவர் ஒரு கல்வித்துறை அதிகாரியாகப் பணியாற்றினார்.[2][3]

Remove ads

அரசியலில்

இராசலிங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பாக 1977 நாடாளுமன்றத் தேர்தலில் உடுப்பிட்டித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4]

இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் இராசலிங்கம் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்[5].

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads