த. நா. குமாரசாமி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தண்டலம் நாராயண சாசுதிரி குமாரசாமி என்னும் த. நா. குமாரசாமி (T N Kumarasamay) வங்க மொழியைப் பயின்று அம்மொழி இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்தவர். எழுத்தாளர். இதழாளர்.

பிறப்பும் குடும்பமும்

த. நா. குமாரசாமி, தண்டலம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த நாராயண சாசுதிரி என்பவருக்கு 1907ஆம் ஆண்டில் மகனாகப் பிறந்தவர். புகழ்பெற்ற மொழிபெயர்ப்பு எழுத்தாளரான த. நா. சேனாபதி இவர்தம் அண்ணன் ஆவார்.

கல்வி

இவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயின்று கலை இளவர் (பி.ஏ.) பட்டம் பெற்றார். சமசுகிருதம், தெலுங்கு, வங்கம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்று அவற்றில் புலமை பெற்றவராகத் திகழ்ந்தார்.

எழுத்துப் பணி

தன் அண்ணன் த. நா. சேனாதிபதியின் தாக்கத்தால் இளம்பருவத்திலே இலக்கியத்தில் ஈடுபாடுகொண்டார். கலைமகள், மணிக்கொடி, ஆனந்த விகடன் ஆகியவை உள்ளிட்ட இதழ்களில் கதைகள் எழுதினார். கலைமகள் இதழில் கி. வா. சகந்நாதன், கா. ஸ்ரீ. ஸ்ரீ ஆகியோரோடு பணியாற்றினார்.[1]

பங்கிம் சந்திர சட்டர்ஜி, இரவீந்திரநாத் தாகூர், சரத் சந்திரர், தாராசங்கர் பந்தோபாத்தியாய், நேதாசி சுபாசு சந்திர போசு உட்பட பல வங்க மொழி எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

இவருடைய படைப்புகளைத் தமிழக அரசு 2006-07ஆம் நிதியாண்டில் நாட்டுடைமை ஆக்கியிருக்கிறது.[2]

நூல்கள்

இவருடைய படைப்புகளும் மொழிபெயர்ப்புகளும் பல நூல்களாக வெளிவந்துள்ளன. அவற்றுள் சில:

சிறுகதைத் தொகுதிகள்

  1. கன்யாகுமாரி
  2. குழந்தை மனம்
  3. சக்தி வேல்
  4. தேவகி
  5. மோகினி
  6. பிள்ளைவரம்
  7. போகும் வழியில்
  8. வஸந்தா
  9. கதைக்கொடி
  10. அன்னபூரணி
  11. கதைக் கோவை-3
  12. கதைக் கோவை-4
  13. இக்கரையும் அக்கரையும்
  14. நீலாம்பரி
  15. சந்திரகிரகணம்

நாவல்கள்

  1. ராஜகுமாரி விபா
  2. சந்திரிகா
  3. இல்லொளி
  4. மனைவி
  5. உடைந்தவளையல்
  6. ஶ்ரீகண்டனின் புனர்ஜன்மம்
  7. தீனதயாளு
  8. மிருணாளினி
  9. இந்திரா
  10. தேவதாஸ்
  11. ஸெளதாமினி
  12. லலிதா
  13. கானல் நீர்
  14. அன்பின் எல்லை
  15. ஒட்டுச்செடி
  16. வீட்டுப்புறா

மொழிபெயர்ப்பு நூல்கள்

  1. கோரா – இரவீந்திரநாத் தாகூர்
  2. புயல் - இரவீந்திரநாத் தாகூர்
  3. விஷ விருட்சம் – பக்கிம் சந்திரர்
  4. இளைஞனின் கனவு – நேதாஜி சுபாஸ்சந்திர போசு
  5. ஆரோக்கிய நிகேதனம் - தாராசங்கர் பந்தோபாத்தியாய்[3]
  6. பொம்மலாடம் (புதுல் நாச்சார் கி இதிகதா வங்காளி . மாணிக் பந்தோபாத்யாய)
  7. வினோதினி (இரவீந்திரநாத் தாகூர்)
  8. யாத்ரீகன்(பிரபோத் குமார் சான்யாஸ்)
Remove ads

திரைத்துறையில்

1940ஆம் ஆண்டில் உலகம் சுற்றும் தமிழன் எனப் புகழப்பட்ட அ. கருப்பண் செட்டியார் (ஏ. கே. செட்டியார்) எடுத்த மகாத்மாகாந்தி என்னும் ஆவணப்படத்திற்கு இவர் உரையாடல் எழுதினார்.

வெளிநாட்டுப் பயணம்

1962ஆம் ஆண்டில் தாகூர் அறிஞர் எனச் சிறப்பிக்கப்பட்டார். அதனால் சோவியத் ஒன்றியத்துக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றார்.

மறைவு

இவர் 1982ஆம் ஆண்டில் சென்னையில் காலமானார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads