நகரம் மறுபக்கம்
சுந்தர் சி. இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நகரம் மறுபக்கம் (Nagaram Marupakkam) என்பது 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்-மொழி அதிரடித் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை சுந்தர் சி. இயக்கி, தயாரித்து மற்றும் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்த படத்தை அவினி சினிமேக்ஸ் நிறுவனத்தின் கீழ் நடிகை குஷ்பூ தயாரிக்க, அனுயா பகவத், வடிவேலு, போஸ் வெங்கட், ஜார்ஜ் விஷ்ணு, சுலில் குமார், பொன்னம்பலம் மற்றும் விச்சு விசுவநாத் போன்ற பலர் நடித்துள்ளனர்.
இப்படம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர் சி.யின் இயக்கத்தில் 19 நவம்பர் 2010 அன்று வெளியானது, மற்றும் இது 1993 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கத் திரைப்படமான 'கார்லிட்டோஸ் வே' என்ற படத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த திரைப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் மற்றும் வடிவேலுவின் "ஸ்டைல் பாண்டி" என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தின் சித்தரிப்புக்காக மிகவும் பிரபலமானது.[1]
Remove ads
கதைச்சுருக்கம்
குற்றவாளி செல்வம் (சுந்தர் சி.) தண்டனை காலம் முடிய வெளியே வருகிறான். தவறுகளை தவிர்த்து நல்ல வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவு செய்கிறான். அந்நிலையில், ஹைதெராபாத்தில் அவனுக்கு வேலை ஒன்றுக் கிடைக்கிறது. அங்கே, நாட்டிய மங்கை பாரதியை சந்திக்கிறான். பின்னர், அவள் வசம் காதலும் கொள்கிறான். நல்லவனாக வாழ முயற்சித்தாலும், அவன் செய்த கடந்த கால தப்புகள் அவனை விடாமல் துரத்த துவங்கின. அவைகளிலிருந்து தப்பித்து சமாளித்து எவ்வாறு நல்லவனாக செல்வம் வாழ்ந்தான் என்பதே மீதிக் கதையாகும்.
Remove ads
நடிகர்கள்
- சுந்தர் சி. - செல்வம்
- அனுயா பகவத் - பாரதி
- வடிவேலு - ஸ்டைல் பாண்டி
- போஸ் வெங்கட் - சக்கர பாண்டி
- ஜார்ஜ் விஷ்ணு - தாமு
- சுலில் குமார் - காசி
- பொன்னம்பலம் - 'தல வேட்டி' தங்கராசு
- விச்சு விசுவநாத் - 'கூடல் புடுங்கி' கோவிந்தன்
- பெசன்ட் ரவி - 'கால் வெட்டி' கருப்பையா
- விட்டல் ராவ் - அண்ணாச்சி
- சித்ரா ஷெனாய் - பாரதியின் அம்மாவும் அண்ணாச்சியின் இரண்டாவது மனைவியும்
- நளினி - அண்ணாச்சியின் முதல் மனைவி
- வி. எஸ். ராகவன் - சேத்
- ஆர். எஸ். சிவாஜி - டைரக்டர்
- கிரேன் மனோகர் - பாண்டியின் உதவியாளர்
- வாசு - - பாண்டியின் உதவியாளர்
- கௌதம் சுந்தர்ராஜன் - அண்ணாச்சியின் மகன்
- என்னத்த கண்ணையா
- மனோ - நாயுடு
- ஜி. சீனிவாசன் - காதர் பாய்
- கௌதமி வேம்புநாதன் - வீட்டு உரிமையாளராக (மாமி)
- பாஸ்கி - இன்ஸ்பெக்டர் வெங்கடேசன்
- விகாஸ் ரிஷி - அன்வரர்
- ஷோபனா
- கிருஷ்ணமூர்த்தி
- முத்துக்காளை
- பாவா லட்சுமணன் - பாண்டியின் உதவியாளராக
- வேல்முருகன் - கரடி
- சக்திவேல் - ஐயர்
- வெங்கல் ராவ் - லாரி டிரைவர்
- மரியம் சகாரியா - குத்தாட்டப் பாடல்
Remove ads
ஒலிப்பதிவு
இந்த திரைப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள் ஆகும், அணைத்து பாடல்களையும் எழுதியவர் வைரமுத்து ஆவார். தமன் என்பவர் இசையமைத்துள்ளார்.[2] பாடல்கள் யாவும் திங்க் மியூசிக் என்ற நிறுவனம் வாயிலாக வெளியானது.[3]
வைரமுத்து அனைத்துப் பாடல்களையும் எழுதி இசையமைத்திருந்தார்.
வரவேற்பு
சுந்தர்.சி பாணியிலிருந்து வேறுபட்ட திரைப்படமாக அமைந்ததாகவும், பலத் திருப்பங்களை கொண்ட விறுவிறுப்பான காட்சிகளை கொண்டதாகவும், அங்கும் இங்கும் சில தவறுகள் இருந்தாலும் அருமையாக திரைப்படமாக இருந்ததாகவும் விமர்சனம் செய்யப்பட்டன.[4] Sify wrote "It is engrossing and moves like a thriller, with rapid twists and turns leading to a stunning climax".[5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads