விச்சு விசுவநாத்
இந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
விச்சு விஸ்வநாத் (Vichu Vishwanath) என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் தோன்றினார். நகைச்சுவை மற்றும் துணை வேடங்களில் பணியாற்றிய இவர், பெரும்பாலும் இயக்குநர் சுந்தர் சி. படங்களில் பணியாற்றியுள்ளார்.[1][2]
Remove ads
தொழில்
விச்சு விஸ்வநாத் இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கோயம்புத்தூரில் பிறந்தவர். ஆர். கே. ஸ்ரீரங்கம்மாள் கல்வி நிலயம் மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். விச்சு ஹேமலதாவை மணந்தார். இவர்களுக்கு கோகிலா என்ற மகள் உள்ளார்.[1] சந்தனக் காற்று (1990) படத்தில் அறிமுகமான இவர், சரத்குமார் மற்றும் விஜய் கிருஷ்ணராஜ் ஆகியோருடன் ஒரு எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்தார்.[3] இப்படத்தின் தயாரிப்பின் போது, படத்தில் உதவி இயக்குநராக இருந்த சுந்தர் சி. உடன் பழகினார். பின்னர் சுந்தர் சி.யின் முறை மாமனில் (1996) முறையாக நடித்தார். அதே நேரத்தில் நடிகை ராதிகா மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்துடன் ஒத்துழைப்பில் இருந்தார்.[1][4]
2017 ஆம் ஆண்டில், சுந்தர் சி யின் தொலைக்காட்சி தொடரான நந்தினியில் பணிபுரிந்தார்.[5]
Remove ads
குறிப்பிடத்தக்க திரைப்படவியல்
- படங்கள்
- சந்தனக் காற்று (திரைப்படம்) (1990)
- தாய் மாமன் (திரைப்படம்) (1994)
- மேட்டுப்பட்டி மிராசு (1994)
- முறை மாப்பிள்ளை (1995)
- உள்ளத்தை அள்ளித்தா (1996)
- மேட்டுக்குடி (திரைப்படம்) (1996)
- நேசம் (1997)
- தேடினேன் வந்தது (1997)
- அருணாச்சலம் (1997)
- சிஷ்யா (1997)
- கங்கா கௌரி (1997)
- மூவேந்தர் (திரைப்படம்) (1998)
- சுயம்வரம் (1999 திரைப்படம்) (1999)
- உனக்காக எல்லாம் உனக்காக (1999)
- அன்பே சிவம் (2003)
- வின்னர் (2003)
- லண்டன் (2005)
- தலைநகரம் (திரைப்படம்) (2006)
- வீராப்பு (2007)
- சண்டை (திரைப்படம்) (2008)
- ஆயுதம் செய்வோம் (2008)
- குரு சிஷ்யன் (2010)
- நகரம் மறுபக்கம் (2010)
- மாப்பிள்ளை (2011)
- கலகலப்பு (2012 திரைப்படம்) (2012)
- முரட்டு காளை (2012)
- மத கஜ ராஜா (2012)
- தீயா வேலை செய்யணும் குமாரு (2013)
- அலெக்ஸ் பாண்டியன் (திரைப்படம்) (2013)
- காடு (2014)
- அரண்மனை (திரைப்படம்) (2014)
- ஆடாம ஜெயிச்சோமடா (2014)
- ஆம்பள (2015)
- திருட்டு விசிடி (2015)
- தூங்காவனம் (2015)
- அரண்மனை 2 (திரைப்படம்) (2016)
- ஹலோ நான் பேய் பேசுறேன் (2016 திரைப்படம்) (2016)
- முத்தின கத்திரிக்கா (2016)
- கண்ணுல காச காட்டப்பா (2016)
- கலகலப்பு 2 (2018)
- மன்னர் வகையறா (2018)
- வந்தா ராஜாவாதான் வருவேன் (2019)
- ஆக்ஷன் (2019)
- நான் சிரித்தால் (2020)
- நாங்க ரொம்ப பிசி (2020)
Remove ads
தொலைக்காட்சி
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads