நக்னசித்தி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நக்னசித்தி என்பவள், கண்ணனின் எண்மனையாட்டிகளில் ஒருத்தியாகச் சொல்லப்படுகின்றாள். சத்தியை என்றும் அழைக்கப்படும் இவள், எண்மரில் ஆறாவது ஆவாள். இவள் வரலாறு, பாகவதம், விஷ்ணு புராணம், அரி வம்சம் முதலியவற்றில் சொல்லப்படுகின்றது.[1]

நக்னசித்தி, அயோத்தியிலிருந்து கோசல நாட்டை ஆண்ட மன்னன் நக்னசித்துவின் மகள் ஆவாள். சத்தியை, கோசலை[2][3] என்று இவளைப் பொதுவாக அழைக்கிறது பாகவதம் முதலான நூல்கள். மகாபாரதமும், "சத்தியை" என்ற எண்மனையாட்டியரில் ஒருத்தி பற்றிக் குறிப்பிடுகின்றது[4] இவளே தமிழ் மரபில் நப்பின்னையாக அறியப்படுகின்றாள்.

Remove ads

வாழ்க்கை

Thumb
கண்ணனுடன் எண்மனையாட்டி - 19ஆம் நூற்றாண்டு மைசூர் ஓவியம்.

நக்னசித்து வளர்த்துவந்த அடங்காக் காளைகள் ஏழினை, மிக நுட்பமாக ஏறுதழுவல் மூலம் வென்று, கண்னன் சத்தியையைக் கரம்பிடித்தான்.[5][6]அவளது மனத்தன்னேற்புக்கு வந்து தோற்றுப்போன ஏனைய இளவரசர்கள், அவர்கள் துவாரகை திரும்பும் வழியில் தாக்கும் போதும், கண்ணனின் யாதவப்படையும், அருச்சுனனும் இணைந்து, அவர்களைத் தோற்கடித்தனர்.[5][6]

நக்னசித்திக்கு, வீரன், சந்திரன், அசுவசேனன், சித்திராகு, வேகவான், விருசன், ஆமன், சங்கு, வசு, குந்தி என பத்து மைந்தர்கள்.[7] "பத்திரவிந்தன்" முதலான பல மைந்தர் அவளுக்கு இருந்ததாக, விஷ்ணு புராணம் சொல்கின்றது.[2] கண்ணனின் மறைவுக்குப் பின், அவனது ஏனைய தேவியர் போலவே இவளும் உடன்கட்டையேறித் தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள்.[8] [9]


Remove ads

நப்பின்னை

தமிழ் வழக்கில், கண்ணன் ஏறு தழுவி வென்று மணந்ததாகச் சொல்லப்படும் நப்பின்னையே இவள் என்ற கருத்துக் காணப்படுகின்றது.[10][11] எனினும், நப்பின்னையை மிதிலை இளவரசியாகவும்,[12] சத்தியையை, அயோத்தி இளவரசியாகவும் சொல்வது பிரதான வேறுபாடாகும். மேலும், தமிழில் வழங்குவதுபோல், இவள் கண்ணனுக்கு யசோதை வழியில் முறைமைத்துனி என்பதற்கான சான்றுகள் வடமொழி இலக்கியங்களில் கிடைக்கவில்லை. எவ்வாறாயினும், நப்பின்னையை நிகர்க்கக் கூடிய ஒரேயொரு வடநாட்டுத் தொன்மம், நக்னசித்தி மாத்திரமே.[13]

ஒரு புராணக் கதையில், கோசல அரசர் நக்நஜித்தின் மகள் நக்நஜிதி, பிறந்தபோது சத்யா என்ற பெயருடன் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சில விளக்கங்களின்படி, பயங்கரமான வெள்ளத்தில் தங்களின் குழந்தையை இழந்த நக்நஜிதியின் பெற்றோர்கள், அக்குலந்தையாய் யசோதையின் சகோதரன் கொம்பகன் தத்தெடுத்தார். சோதமா அவரது தத்தெடுக்கப்பட்ட சகோதரராக இருந்தார்.[14]

அவள் கிருஷ்ணருடன் வளர்ந்தார், மேலும் அவர்களுடைய பெற்றோர் இருவரையும் திருமணம் செய்ய திட்டமிட்டனர். ஒரு நாள், அறியாமல், தனது சகோதரனை கிருஷ்ணருடன் விளையாட விட மறுத்தார். இதனால், கோபமடைந்த அவரது சகோதரர், “நீ கிருஷ்ணரிடமிருந்து பிரிந்து இருப்பாய்” என்று சாபம் அளித்தார். பின்னர் கம்சனை கொல்ல கிருஷ்ணர் கோகுலத்தை விட்டு சென்றபோது, அந்த சாபம் செயல்பட்டது, மேலும் நக்நஜிதி மனம் உடைந்து போனாள்.[15]

சிறிது காலத்துக்கு பிறகு, நக்நஜித் மன்னர் ஒரு யக்ஞம் நடத்தி, தன் மகளின் இருப்பிடத்தை கண்டுபிடித்தார். அதன் பின்னர் அவள் கோசலாவுக்கு திரும்பினார். இதைப் பற்றி அறிந்த கிருஷ்ணர் தன் காதலை அடைவதற்கு முயன்று கோசலாவுக்கு பயணம் செய்தார். அங்கே, கோசல மக்களின் வாழ்க்கையை தொந்தரவு செய்த எரி மழையை நகரத்திலிருந்து தூக்கி கடலுக்குள் எறிந்து அழித்து விட்டார். தன் திறனைக் காட்டி நகரத்தை காப்பாற்றியதால், கிருஷ்ணர் சத்யாவை (நப்பினை அல்லது நக்நஜிதி) திருமணம் செய்யும் உரிமையைப் பெற்றார்


Remove ads

மேலும் பார்க்க

அடிக்குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads