நசியம் முகமது பரூக்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
நசியம் முகமது பரூக் (Nasyam Mohammed Farooq) (பிறப்பு: மே 15, 1950) ஆந்திரப் பிரதேச சட்ட மேலவையின் 9வது தலைவராகப் பணியாற்றிய ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். பரூக் ஆந்திர பிரதேச சட்ட மேலவையில் <a href="./தெலுங்கு_தேசம்_கட்சி" rel="mw:WikiLink">தெலுங்கு தேசம் கட்சி</a>யின் நியமன உறுப்பினராக உள்ளார்.
Remove ads
அரசியல் வாழ்க்கை
இவர் ஆந்திரப் பிரதேச அரசாங்கத்தில் சுகாதாரக் கல்வி மற்றும் சிறுபான்மை நலனுக்கான அமைச்சராக நவம்பர் 2018 முதல் மே 2019 வரை பணியாற்றினார் [1][2]
1984ல் என். டி. ராமராவ் அமைச்சரவையில் சர்க்கரை, வக்ஃப் சிறுபான்மை நலன் மற்றும் உருது அகாதமி அமைச்சராகவும், 1994 முதல் 2004 வரை துணை சபாநாயகராகவும், நா. சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் நகராட்சி நகர்ப்புற வளர்ச்சி சிறுபான்மை நலன் அமைச்சராகவும் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.[3] இவர் முன்பு நந்தியால் நகராட்சியின் உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும், ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராகவும் பணியாற்றினார். 10 நவம்பர் 2018 அன்று, இவர் ஆந்திரப் பிரதேச சட்ட மேலவையின் தலைவராக கிட்டத்தட்ட ஓராண்டு பணியாற்றிய பிறகு, முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு ஆந்திரப் பிரதேச அரசில் சுகாதாரம் மற்றும் சிறுபான்மையினர் அதிகாரமளித்தல் அமைச்சராகப் பணியாற்றினார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads