நா. சந்திரபாபு நாயுடு

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

நா. சந்திரபாபு நாயுடு
Remove ads

நாரா சந்திரபாபு நாயுடு (தெலுங்கு: నారా చంద్రబాబు నాయుడు, பி. ஏப்ரல் 20, 1950), ஒரு இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சரும் ஆவார்.[2][3] 1995 முதல் 2004 வரையும்,2014 முதல் 2019 வரையும் ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். இவரே கூடுதலான நாட்கள் பதவியில் இருந்த ஆந்திர முதலமைச்சர் ஆவார்.[4] தற்போது தெலுங்கு தேசக் கட்சியின் தலைவராக உள்ளார். ஹெரிட்டேஜ் ஃபூட்ஸ் என்ற உணவு நிறுவனத்தை 1992 ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார். 2014 இல் நடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தெலுங்கானாவை தவிர்த்து, ஆந்திரப் பிரதேசத்தின் ஏனைய பகுதிகளில் பெரும் வெற்றி பெற்றார். புதியதாக அமைக்கப்பட்ட சீமாந்திரா மாநிலத்தின் முதன்முதலில் முதல்வராகப் பதவியேற்றார்.

விரைவான உண்மைகள் நாரா சந்திரபாபு நாயுடு, 13வது ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ...

இவர் முதலமைச்சராக பொறுப்பில் இருந்தபோது பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேர் மற்றும் அமெரிக்க குடியரசுத் தலைவர் பில் கிளின்டன் ஆகியோர் இவரை ஐதராபாத்தில் சந்தித்துள்ளனர். இந்தியா டுடே,தி எகனாமிக் டைம்ஸ்,டைம் (இதழ்) போன்ற இதழ்களின் ஆண்டுச் சிறப்பு விருதுகளையும் உலக பொருளாதார மன்றத்தின் கனவு அமைச்சரவையின் அங்கத்துவத்தையும் வென்றுள்ளார்.[5][6][7][8] தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தேசிய தகவல்தொழிற்நுட்பக் குழுவின் அவைத்தலைவராக பொறுப்பு வகித்துள்ளார்.[9][10]

Remove ads

இளமையும் கல்வியும்

சந்திரபாபு ஏப்ரல் 20, 1950இல் ஆந்திரப் பிரதேசத்தின், சித்தூர் மாவட்டத்தின் நாரவாரிபள்ளி கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் கர்ஜூரா நாயுடு மற்றும் அம்மனம்மாவிற்கு மகனாகப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கக் கல்வியை சேசாபுரத்திலும் ஒன்பதாவது வகுப்பு வரை சந்திரகிரி அரசு உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார்.[11] பின்னர் திருப்பதியில் மேல்நிலைப் பள்ளிப்படிப்பு முதல் முதுகலைப் பட்டம் வரைப் படித்தார். 1972இல் இளங்கலை பட்டத்தையும், 1974இல் பொருளியலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். மேலும் பொருளியலில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும்போது அரசியலில் ஈடுபட்டதால் தமது கல்விப் பயணத்தை முடித்துக் கொண்டார்.[11][12][13]

Remove ads

ஆட்சி

1984ம் ஆண்டு தனது இதய அறுவைச் சிகிச்சைக்காக என். டி. ராமராவ் அமெரிக்கா சென்ற போது அவரின் கட்சியைச்சேர்ந்த பாஸ்கர் ராவ் அரசியல் சதி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். அப்போது கட்சிக்குள் கொந்தளிப்பு ஏற்பட்டது. அமெரிக்காவிலிருந்து வந்து கருப்பு உடையணிந்து நீதிகேட்டு தர்ம யுத்தம் செய்தார் என்.டி.ஆர். அந்த மாதமே கவர்னரின் உதவியால் மீண்டும் ஆட்சி என்.டி.ஆர், கையில் வந்தது. அதன் பின் என்.டி.ஆரின் மருமகனான இவர் முதல்வராக பதவியேற்றார். மீண்டும் 2014 ஆம் ஆண்டின் சூன் இரண்டாம் நாளில் ஆந்திரா இரண்டாக பிரிந்து தெலுங்கானா, சீமாந்திரா என பிரிந்த போது, 175 தொகுதிகளில் 102 தொகுதிகளை வென்று சீமாந்திராவின் முதல்வராக பதவியேற்றார்.[14]

பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், 175 சட்டமன்ற தொகுதிகளில், 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, ஆட்சியை பறிகொடுத்தார்.[15]

Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads