நச்சுயிரி நோய்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நச்சுயிரி நோய் (viral disease) ( அல்லது நச்சுயிரித் தொற்று, அல்லது நச்சுயிரித் தொற்று நோய் ஓர் உயிரியின் உடலில் நோயீனி நச்சுயிரிகள் முற்றுகையிட்டு உயிர்க்கலங்களில் நுழைந்து அவற்றுடன் தொற்றிக்கொள்ளும்போது தோன்றுகிறது .[1]

விரைவான உண்மைகள் நச்சுயிரி நோய் Viral disease, சிறப்பு ...
Remove ads

கட்டமைப்புப் பான்மைகள்

ஒரே குடும்பத்தில் உள்ள நச்சுயிரி இனங்கள் ஒரேவகையான மரபன்தொகை வகைமை, வீறியன் வடிவம், இனப்பெருக்கக் களம் ஆகிய அடிப்படை கட்டமைப்புப் பான்மைகளைப் பகிர்கின்றன.

நச்சுயிரி சார்ந்த ஐந்து இரட்டைப்புரி டி.என்.ஏ மரபன்தொகை அமைந்த குடும்பங்கள் உள்ளன: இவற்றில் அடினோவிரிடே, பாப்பிலோமாவிரிடே, பால்யோமாவிரிடே எனும் மூன்று குடும்பங்கள் உறையற்றன; எர்ப்பெசுவிரிடே, போக்சுவிரிடே ஆகிய இரண்டுகுடும்பங்கள் உறையுள்ளவை. அனைத்து உறையற்ற குடும்பங்களும் ஐசாசுஹெட்ரல் காப்சிடுகளைக் கொண்டுள்ளன.

எபடுனாவிரிடே எனும் ஓர் இரட்டைப்புரி கொண்ட டி. என். ஏ மரபன்தொகை அமைந்த தனி நச்சுயிரிக் குடும்பமும் உள்ளது: இந்த நச்சுயிரிகள் உறையுள்ளன.

மாந்தரைத் தொற்றும் பார்வோவிரிடே எனும் நச்சுயிரி சார்ந்த ஒற்றைப்புரி டி. என். ஏ மரபன்தொகை அமைந்த குடும்பமும் உள்ளது. இதன் நச்சுயிரிகள் உறையற்றவை.

நச்சுயிரி சார்ந்த ஏழு நேரியல் ஒற்றைப்புரி ஆர். என். ஏ மரபன்தொகை அமைந்த நச்சுயிரிக் குடும்பங்கள் உள்ளன: இவற்றில் உறையற்ற ஆசுட்டிரோவிரிடே, காலிசிவிரிடே, பிகார்னாவிரிடே எனும் மூன்று குடும்பங்களும் உறையுள்ள கொரொனாவிரிடே, பிளேவிவிரிடே, இரெட்ரோவிரிடே, டோகாவிரிடே எனும் நான்கு குடும்பங்களும் அமைகின்றன. அனைத்து உறையற்ற குடும்ப நச்சுயிரிகளும் ஐசாசுஹெட்ரல் காப்சிடுகளைப் பெற்றுள்ளன.

நச்சுயிரி சார்ந்த ஆறு எதிரியல் ஒற்றைப்புரி ஆர். என். ஏ மரபன்தொகை அமைந்த குடும்பங்களும் உள்ளன: இவற்றிலமரினாவிரிடே, புன்யாவிரிடே, பிளோவிவிரிடே, ஆர்த்தோமிக்சோவிரிடே, பாராமிக்சோவிரிடே, இறாப்டோவிரிடே ஆகியன அடங்கும். இவை அனைத்தும் உறையுடன் எழுசுருள் உட்கரு காப்சிடுகளைப் பெற்றுள்ளன.

இரியோவிரிடே எனும் ஓர் இரட்டைப்புரி ஆர். என். ஏ மரபன்தொகை அமைந்த குடும்பமும் உள்ளது.

மேலுள்ள எந்தவகை நச்சுயிரிக் குடும்பத்திலும் வகைபடுத்தப்படாத கல்லீரல் அழற்சி டி வகை (எப்படிட்டிசு டி வகை) நச்சுயிரி எனும் கூடுதலான நச்சுயிரி ஒன்றும் உள்ளது. இது மாந்தரைத் தொற்றும் பிற நச்சுயிரிக் குடும்பங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக அமைகிறது.

நோய் ஏற்படுத்தாமல் மாந்தரைத் தொற்றும் அனெல்லோவிரிடே எனும் நச்சுயிரிக் குடும்பம் ஒன்றும் டிபெண்டோவைரசு எனும் நச்சுயிரிப் பேரினம் ஒன்றும் உள்ளன. இந்த இருவகையன்களும் உறையற்ற ஒற்றைப்புரி டி. என். ஏ மரபன்தொகை அமைந்த நச்சுயிரிகளாகும்.

நடைமுறை விதிகள்

மாந்தரைத் தொற்றும் நச்சுயிரிக் குடும்பங்களிடையே மருத்துவர்களும் நுண்ணுயிரியலாளர்களும் நச்சுயிரியலாளர்களும் பின்பற்றவேண்டிய பல நடைமுறை விதிகள் உள்ளன.

பொது விதிமுறையாக, டி. என். ஏ நச்சுயிரிகள் உட்கருவில் இனப்பெருக்கம் செய்கின்றன; ஆர். என். ஏ நச்சுயிரிகள் கலக்கணிகத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த பொது விதிமுறைக்கு சில விதிவிலக்குகள் உள்ளன. போக்சுவைரசுகள் கலக்கணிகத்திலும் ஆர்த்தோமிக்சோவைரசுகளும் எப்படிட்டிசு டி நச்சுயிரிகளும் உட்கருவிலும் இனப்பெருக்கம் செய்கின்றன.

புன்யாவிரிடே, ஆர்த்தோமிக்சோவிரிடே, அரினாவிரிடே, இரியோவிரிடே ஆகிய நான்கு குடும்பங்கள் துண்டாடப்பட்ட மரபன்தொகைகளைக் கொண்டுள்ளன (இவற்றின்சுருக்கப்பெயர் ஆங்கிலத்தில் BOAR என்பதாகும்). இவை அனைத்துமே ஆர்.என். ஏ நச்சுயிரிகளாகும்.

புன்யா நச்சுயிரி, பிளேவி நச்சுயிரி, டோகா நச்சுயிரி ஆகிய மூன்று குடும்பங்கள் கணுக்காலிகளால் மட்டுமே கடத்தப்படுகின்றன. சில இரியோ நச்சுயிரிகள் கணுக்காலி நோயீனிகளாலும் கடத்தப்படுகின்றன. இவை அனைத்துமே ஆர்.என். ஏ நச்சுயிரிகளாகும்.[2]

கொரோனாவிரிடே எனும் உறையுள்ள நச்சுயிரிக் குடும்பம் மட்டும் குடலழற்சியை ஏற்படுத்துகிறது. குடலழற்சி தரும் பிற நச்சுயிரிக் குடும்பங்கள் உறையற்றவையாக உள்ளன.

பால்ட்டிமோர் குழு

பால்ட்டிமோர் குழு பகுப்புமுறை நச்சுயிரிகளின் பலவகைகளைக் கீழுள்ளபடி புரி எண்ணிக்கை சார்ந்தும் இயங்கு போக்கு சார்ந்தும் வரையறுக்கின்றன.இதில் இபு என்பது இரட்டைப்புரியையும் ஒபு என்பது ஒற்றைப்புரியையும் குறிக்கும்.

  • I - இபு டி.என்.ஏ
  • II - ஒபு டி.என்.ஏ
  • III - இபு ஆர்.என்,ஏ
  • IV - நேரியல் போக்கு ஒற்றைப்புரி ஆர்.என்.ஏ
  • V - எதிரியல் போக்கு ஒற்றைப்புரி ஆர்.என்,ஏ நச்சுயிரி
  • VI - சுழல் நச்சுயிரி (ஒபு ஆர்.என்.ஏ-சுழல்வகை)
  • VII - சுழல் நச்சுயிரி (இபு ஆர்.என்.ஏ-சுழல்வகை)

கீழ்வரும் அட்டவணைகள் மருத்துவ இயலாக மிகவும் முதன்மையான[3] நச்சுயிரிகளைத் தருகின்றன.

மேலதிகத் தகவல்கள் குடும்பம், பால்ட்டிமோர் குழு ...

மருத்துவ இயல் பான்மைகள்

ஒரே குடும்ப நச்சுயிரி இனங்கள் கணிசமாக வேறுபட்ட மருத்துவ இயல் பான்மைகளைக் கொண்டிருக்கலாம்:

மேலதிகத் தகவல்கள் வகை, குடும்பம் ...

குறிப்புகள்

Remove ads

நோய்நாடலும் ஆற்றுதலும்

நச்சுயிரி நோய் காய்ச்சலுக்கு முந்திய கடுமையான தசை, மூட்டு வலிகள், தோல்தடிப்புகள், வீங்கிய கணுக்கால் நாளங்கள் போன்ற மருத்துவமனை அறிகுறிகளால் கண்டுபிடிக்கப்படுகிறது.

நச்சுயிரித் தொற்றுகளை ஆய்வக முறைகளால் கண்டறிதல் மிகவும் அரிதாகும். ஏனெனில், குருதி வெள்ளை உயிர்க்கல எண்ணிக்கையை கூட்டுவதில்லை.மென்றாலும், இதோடு தொடர்புள்ள குச்சுயிரித் தொற்றுகளை ஆய்வக முறைகளால் கண்டறியலாம்.

நச்சுயிரித் தொற்றுகள் மிகக் குறைந்த நேரமே இருப்பதால் வழக்கமாக நோயின் அறிகுறிகளைத் தணிப்பதிலேயே கவனம் செலுத்தவேண்டும்; காய்ச்சல் தணிப்பு, வலிநீக்க மருந்துகளே வழக்கமாக பயன்படுத்தப்ப்படுகின்றன.[36]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads