வெறிநாய்க்கடி நோய்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வெறிநாய்க்கடி நோய் அல்லது ரேபீஸ் நோய் (Rabies) என்பது மனிதர், விலங்குகளில் இறப்பை ஏற்படுத்தக்கூடிய தீவிரமான நோய்க்காரணிகளுள் ஒன்றான ரேபீஸ் தீநுண்மத்தால் (rabies virus), இளஞ்சூட்டுக் குருதியுடைய விலங்குகளில் ஏற்படும் மூளையழற்சி நோய் ஆகும்.[1] பாதிக்கப்பட்ட நாய் மற்றும் விலங்குகளின் கடியால் பரவும் ஒரு தொற்றுநோய் ஆகும்.
Remove ads
நோய் பரவல்
காடுகளில் வாழும் சிலவகை வௌவால், நரி, ஓநாய், மற்றும் வீட்டு விலங்கான நாய்போன்ற ஒரு சில விலங்குகளின் உடலில் வழக்கமாய் வாழும் இந்த வைரசு, அவ்விலங்குகள் கடிப்பதால் நேரடியாகவோ, அல்லது அவ்விலங்குகளால் கடிக்கப்பட்ட பிற விலங்குகள் கடிப்பதாலோ இந் நோய் ஏற்படுகிறது. கொல்லைப்படுத்தப்பட்ட வீட்டு விலங்கான நாயிலிருந்தே இந்நோய் பொதுவாக மனிதர்களுக்குப் பரவுகின்றது.
இந்த வைரசு அதிக அளவாக ஐந்து ஆண்டுகள் வரை 'உறக்கத்தில்' இருந்துவிட்டுக் கூடத் தாக்கலாம்[சான்று தேவை].
Remove ads
நோயின் தன்மை
மூளையழற்சி ஏற்படுத்தி, மைய நரம்பு மண்டலத்தைக் கடுமையாகப் பாதித்து, பின்னர் மூளையையும் பாதித்து இறுதியில் மரணத்தை விளைவிக்கும் இந்த தீநுண்மம், உமிழ்நீரில் அதிகமாக வாழ்ந்து கொண்டு, இந்நோயினால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மனிதர்களைக் கடிக்கும்போதோ ,ஏற்கனவே உள்ள ஆறாத காயத்தில் உமிழ்நீர் படுவதாலோ மிக எளிதாக மனிதரின் இரத்தத்தில் கலந்துவிடுகிறது.
நோய் தடுப்பு
இந்த வைரசால் தாக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் விலங்கு கடித்துவிட்டால் உடனடியாக நோய்த்தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். முதலிலேயே சரியான தடுப்பு மருந்து (anti-rabies vaccine-ARV) பயன்படுத்துவதன் வாயிலாக வீட்டு விலங்குகளை இந்நோய் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads