இதயத்தசை வீக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இதயத்தசை வீக்கம் என்பது நோய் கிருமிகளின் தோற்றுதலாலோ அல்லது உடற்செயலியல் மாற்றம் ஏற்படுவதலோ இதய தசையில் ஒவ்வாமை ஏற்பட்டு வீக்கமடைத்தல் ஆகும்.[1]நோய் அறிகுறிகள் சுவாசக்கோளாறு, நெஞ்சுவலி, உடற்பயிற்சி திறன் குறைதல், சோர்வு மற்றும், அசாதாரண இதய துடிப்பு ஆகும்.[1] நோய் தாக்கம் சில மணி நேரம் முதல் பல மாதங்கள் வரை இருக்கும்.[1] இதன் விளைவுகளாக இதயம் செயலிழப்பு, இதய தசை நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படும்.[1]
இதயத்தசை வீக்கம் பொதுவாக வைரஸ் கிருமி தொற்றுதலால் ஏற்படுகிறது.[1] மற்ற நோய் காரணிகளாக பாக்டீரியா கிருமிகள், சில வகை மருந்து பொருட்கள், நச்சு பொருட்கள் மற்றும் தன்னுடல் தாக்குநோய்கள் அமைகிறது.[1][2] நோய் கண்டறியும் முறைகளாக இருப்பவை முறையே இதய துடிப்பலைஅளவி பயன்படுத்துவது, தரோபோனின் அளவு அதிகரித்துள்ளதா என காண்பது, இதய காந்த அதிர்வு அலை வரைவு பார்ப்பது, சில சமயங்களில் இதய உயிரகச்செதுக்கு ஆராய்வது ஆகும்.[1][2] இதய மீயொலி ஆய்வு இதய அடைப்பிதழ் குறைபாடுகளை கண்டறிய பெரிதும் உதவுகிறது.[2]
நோயின் தாக்கம் மற்றும் நோயின் காரணிகளை பொறுத்து சிகிச்சை முறை அமையும்.[1][2] பொதுவாக இதய அழுத்த மாற்று நொதியம் குறைப்பான், இரத்த அழுத்தம் குறைப்பான் மற்றும் நீர் சத்து குறைப்பான் ஆகிய மருந்துகள் பயன்படுத்தப்படும்.[1][2] மருந்துகள் மூலம் நோய் தாகம் குறையும் போது உடற்பயிற்சி செய்வது அவசியமில்லை.[1][2] உயிர் கிரியா ஊக்கி அல்லது பிறபொருளெதிரிகளை இரத்த நாளத்தில் உட்செலுத்துவதால் சில நோய்களை குணப்படுத்த முடியும். [1][2] மிகவும் மோசமான நோய் தாகத்திற்கு தானியங்கி இதய துடிப்பான் அல்லது இதய மாற்று அறுவைச் சிகிச்சை பரிசீலனை செய்யப்படுகிறது.[1][2]
2013 ஆம் ஆண்டில் சுமார் 1.5 மில்லியன் மக்கள் இந்த கடுமையான இதயத்தசை வீக்கம் நோயினால் பதிப்பிற்குள்ளானர்.[6] பொதுவாக அனைத்து வயதினரும் பாதிக்கப்பட்டாலும் இளம் வயது நபர்களே அதிகளவில் பாதிப்படைகின்றனர்.[7] பெண்களை விட ஆண்களிடையே இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.[1] [2] 2015 ஆம் ஆண்டில் இந்த நோயின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3,54,000 பேர் இது 1990 ஆம் ஆண்டு இறந்தவர்களின் எண்ணிக்கையான 2,94,000 என்ற அளவை விட அதிகமாகும்.[8][9] இந்த நோயறிகுறி 1800களின் நடு ஆண்டுகளிலிருந்து பதியப்பட்டுள்ளது.[10]
இதயத்தசை வீக்கம் 1600 ஆம் ஆண்டு காலத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.[11] ஆனால் 1837 ஆம் ஆண்டில் இதயத்தசை வீக்கம் என்ற சொற்பதம் செர்மானிய மருத்துவர் ஜோசப் பிரிடரிக் சோபர்ன்ஹீம் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.[12] இருந்தபோதும் இந்த சொற்பதம் இரத்த சுற்றோட்ட மண்டல நோய்களான உயர் இரத்த அழுத்தம் மற்றும் குருதி ஊட்டக்குறை இதய நோய்க்கு தவறாக பயன்படுத்தினர்.[13][14] இதயத்தசை வீக்கத்தால் பாதிப்பு பற்றிய சரியான தகவல்கள் இல்லை ஆயினும் 1 முதல் 9% நோயாளிகள் இதயத்தசை வீக்கத்தால் பாதிப்புக்கு ஆளானவர்களே. இளம் இளைஞர்கள் திடீரென இறப்பதற்கு 20% இந்த இதயத்தசை வீக்கம் காரணமாக இருக்கிறது.ஹச்.ஐ.வி நோய் தொற்று உள்ள நோயாளிகளில் 50% அல்லது அதற்கு மேல் இந்த இதயத்தசை வீக்க நோயால் பாதிக்கப்படுகின்றனர்.[15]
Remove ads
அறிகுறிகளும் உணர்குறிகளும்
இதயத்தசை வீக்கத்துடன் தொடர்புடைய அறிகுறிகளும் உணர்குறிகளும் பலவேறாக உள்ளன. இவை நேரடியாக இதயத்தசை சுவரின் வீக்கத்துடனோ அல்லது இதயத்தசை வலுவிழந்து அதனால் ஏற்படும் வீக்கத்துடனோ தொடர்புள்ளவை. பின்வருபவை இவற்றில் சிலவாகும்:[16]
- நெஞ்சு வலி (வெகுவாக இந்த வலி "குத்துவது" போல விவரிக்கப்படுகிறது)
- குருதித்தேக்க இதயத் திறனிழப்பு (திரவக் கோர்வை, மூச்சுத் திணறல் மற்றும் கல்லீரல் தேக்கம் போன்றவை ஏற்படக் காரணமாக)
- சீரற்ற நெஞ்சுத்துடிப்புகள் (இதய இலயமின்மையால்)
- இதய ஒலிகள் மெலிதல்
- சடுதிமரணம் (இளைஞர்களிடையே இதயத்தசை வீக்கம் சடுதி மரணத்திற்கான அனைத்துக் காரணங்களில் 20% வரையாக உள்ளது)[17]
- காய்ச்சல் (குறிப்பாக தொற்றுநோய்களின் போது, காட்டாக வாதக் காய்ச்சல்)
- இளம் சிறார்களிடையே அறிகுறிகள் குறிப்பிடும் வகையில் இல்லை; பொதுவான உடல்நலக் குறை, பசியின்மை, வயிற்று வலி, நாள்பட்ட இருமல். நோய் முற்றிய நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஈழை நோயாக கண்டுணற வாய்ப்புண்டு.
பொதுவாக இதயத்தசை வீக்கம் நச்சுயிரி தொற்றினால் ஏற்படுவதால் பல நோயாளிகள் நச்சுயிரி தொற்றுக்கான அறிகுறிகளான சுரம், தடிப்புகள், வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, எளிதாக சோர்வடைதல் போன்ற உணர்குறிகளைத் தெரிவிப்பர்.[18]
இதயத்தசை வீக்கத்துடன் இதயவுறை அழற்சியும் தொடர்புடையது. எனவே பல நோயாளிகளுக்கும் இரு நோய்களுக்கான உணர்குறிகளும் உடனிருக்கும்.[19][20]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads