நடன காசிநாதன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நடன காசிநாதன் (1940 – 6 அக்டோபர் 2025) என்பவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநரும், தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் (Tamil Nadu Archaeological Research Centre) நிறுவனரும் ஆவார்.[1]. மேலும் தமிழர்களின் வரலாற்று பழமை நிறுவல் ஆராய்ச்சி நூல்கள் பலவற்றையும் வெளியிட்டுள்ளார்.

வாழ்கைக் குறிப்பு

நடன காசிநாதன் தமிழ்நாட்டின், தற்போதைய கடலூர் மாவட்டம் நெய்வேலிக்கு அருகில் உள்ள தொப்பளிக்குப்பத்தில் பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொன்மை வரலாறு, தொல்லியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1967 இல் தமிழ்நாடு தொல்லியல் துறையில் கல்வெட்டாய்வாளராக பணியில் சேர்ந்தார். 1989 இல் அத்துறையின் இயக்குநராக உயர்ந்தார். 1998 இல் ஓய்வு பெற்றார்.

இவரதுப் பணிக்காலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு பல புதிய கல்வெட்டுகளையும், செப்பேடுகளையும் கண்டறிந்தார். திருத்தணிக்கு அருகில் உள்ள வேலஞ்சேரியில் இவர் கண்டுபிடித்த இரு அரிய செப்பேடுகளினால் பல்லவர் வரலாற்றில் இருந்த குழப்பம் நீங்கப் பேருதவியாக இருந்தது.[2]

Remove ads

நாணயவியல்

இவர் வெளியிட்ட தமிழக காசு இயல் புத்தகம் வெளிவரும் முன்பு முத்திரை காசுகள் வட இந்தியாவில் இருந்து தமிழகம் வந்தவை என்ற கருத்து நிலவியது. ஆனால் மகாலிங்கம் போன்றவர்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதலே பாண்டியர்கள் முத்திரைக் காசுகளை வெளியிட்டுள்ளதால் வடவிந்தியா வழியே தமிழகத்துக்கு இக்காசுகள் வந்தவை என்ற கருத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்று கருதினர். அந்நேரத்தில் இவர் வெளியிட்ட தமிழக முத்திரைக்காசுகளின் பட்டியல் அதை உறுதிப்படுத்தின.

Remove ads

ஆய்வுக் கட்டுரைகள்

இவர் வெளியிட்ட ஆய்வு நூல்கள் மற்றும் கட்டுரைகளில் சில,

  1. தமிழர் காசு இயல் (நூல்), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
  2. தமிழக கல்வெட்டோடு காணப்படும் குறியீடுகள், பத்தாவது கருத்தரங்கு, ஆய்வுக்கோவை.
  3. தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறையின் அண்மைக் கண்டுபிடிப்புகள், ஆவணம் இதழ்.
  4. Antiquity of sea voyage in Tamilnadu.

ஆய்வு நூல்கள்

  1. கல்லெழுத்துக்கலை [3]
  2. முத்தில் முகிழ்த்த முத்தரையர்[4]
  3. வன்னியர்
  4. தென்பகுதிப் பாளையக்காரர்கள் வரலாறு
  5. மண்ணும் மாந்தரும்
  6. தமிழர் பண்பாட்டுச் சிதறல்கள்
  7. சோழ வேந்தர் பரம்பரை வன்னியப் பாளையக்காரர் வரலாறு
  8. பூம்புகாரும் கடல் அகழாய்வும்
  9. பெரம்பலூர் மாவட்டத் தடயங்கள்
  10. பண்டைத் தடயம், மா.சந்திரமூர்த்தி என்றவருடன் சேர்ந்து வெளியிட்ட புத்தகம்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads