உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

From Wikipedia, the free encyclopedia

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்map
Remove ads

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (International Institute of Tamil Studies) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் புறநகர்ப் பகுதியான தரமணியில் அமைந்துள்ள ஒரு மொழியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...
Remove ads

வரலாறு

சனவரி 1968-இல் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தொடர்ந்து அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் "பேரறிஞர்" கா. ந. அண்ணாதுரை, பிரெஞ்சுத் தமிழறிஞர் ழான் ஃபில்லியொசா (Jean Filliozat), ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் (யுனெஸ்கோ) அன்றைய துணை பொது இயக்குநர் மால்கம் ஆதிசேசையா ஆகியோரின் முயற்சியால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாக்கப்பட்டது.[1]

பிரிவுகள்

பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம்

பழந்தமிழரின் சிறப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் சுடுமண் சிற்பம், சுதைச் சிற்பம், மரம், கல், உலோகம் ஆகியவற்றைக் கொண்டு படிமங்களாக வடிவமைத்த கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் இந் நிறுவனத்தில் 1 மார்ச் 2016 அன்று அன்றைய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவால் திறந்துவைக்கப்பட்டது.[2] [3] இதில் தொல்காப்பியர் அரங்கு,திருவள்ளுவர் அரங்கு, கபிலர் அரங்கு,ஔவையார் அரங்கு, இளங்கோவடிகள் அரங்கு, கம்பர் அரங்கு, தமிழ்த் தாய் ஊடக அரங்கு ஆகியவற்றில் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக் கூடத்தின் பொறுப்பாளராக முனைவர் ஆ. மணவழகன் உள்ளார்.

சுவடியியல் பாதுகாப்பு மையம்

2014-இல் "தமிழ்நாடு முழுவதும் கண்டறியப்படும் சுவடிகள், தாள் சுவடிகள் மற்றும் அரிய நூல்கள் அனைத்தையும்" பாதுகாக்கும் வண்ணம் சுவடியியல் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டது.[4] இம் மையத்தின் பொறுப்பாளராக முனைவர் அ. சதிஷ் உள்ளார்.

Remove ads

இயக்குநர்கள்

மேலதிகத் தகவல்கள் எண், படம் ...

புகழ்

"உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நோக்கும் போக்கும் மற்ற தமிழாய்வு நிறுவனங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் உருவாக்கப்பட்டதாகும். இந்தியாவின் பிற மொழி மாநிலங்களில் - உலகிலுள்ள பிற நாடுகளில் நடைபெறும் தமிழாராய்ச்சிக்கான மையமாக இவ்வமைப்பு இயங்க வேண்டும் என்பது அடித்தளக் கோட்பாடாகும்." என்றார் தமிழறிஞர் மணவை முஸ்தபா.[1]

வெளியீடுகள்

  1. ஊஞ்சல் இலக்கியம்; த. அழகப்பராசு (பதி.)
  2. தமிழெழுத்தின் வரிவடிவம்; சி. கோவிந்தராசனார்; 1993

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads