இடையமெரிக்கக் கட்டிடக்கலை

From Wikipedia, the free encyclopedia

இடையமெரிக்கக் கட்டிடக்கலை
Remove ads

இடை-அமெரிக்கக் கட்டிடக்கலை (Mesoamerican architecture) என்பது, நடு அமெரிக்காவைச் சேர்ந்த கொலம்பசுக்கு முற்பட்ட பண்பாடுகள் மற்றும் நாகரிகங்களுடைய கட்டிடக்கலை மரபுகளினது தொகுதியைக் குறிக்கும். இக் கட்டிடக்கலை மரபுகள், பொதுக் கட்டிடங்கள், நகர்ப்புறக் கட்டிடங்கள் மற்றும் அமைப்புகள் வாயிலாக அறியப்படுகின்றன. நடு-அமெரிக்கக் கட்டிடக்கலையின் சிறப்பு அம்சங்கள் பல்வேறுபட்ட பிரதேச மற்றும் வரலாற்றுப் பாணிகளைத் தழுவியவையாக இருப்பினும் அவை ஒன்றுக்கொன்று குறிப்பிடத்தக்க அளவு தொடர்புகளைக் கொண்டவையாக உள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளாக நடு-அமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியைச் சேர்ந்த பண்பாடுகளுக்கு இடையே நடைபெற்றுவந்த பண்பாட்டுப் பரிமாற்றங்கள் காரணமாக இப் பாணிகள் பல வரலாற்றுக் கட்டங்களூடாக வளர்ச்சியடைந்து வந்துள்ளன. நடு-அமெரிக்கக் கட்டிடக்கலை, பெரும்பாலும் அதன் பிரமிட்டுகளுக்காகவே அறியப்படுகின்றது.

Thumb
மெக்சிக்கோவில் உள்ள பலெங்கு (Palenque) என்னும் நகரத்தின் பிளாசாவின் தோற்றம். இது செந்நெறிக் காலத்தைச் சேர்ந்த இடை-அமெரிக்கக் கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

நடு-அமெரிக்காவில், அண்டவியல், சமயம், புவியியல், கட்டிடக்கலை என்பவற்றுக்கு இடையிலான தொடர்புகள் பற்றிப் பரந்த அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. நடு-அமெரிக்கக் கட்டிடக்கலையின் இயல்புகள் பல சமயம் மற்றும் தொன்மவியல் எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதாக இவ்வாய்வுகளிற் பல எடுத்துக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, நடு-அமெரிக்க நகரங்கள் பலவற்றின் தள அமைப்புகள், முதன்மைத் திசைகளையும், நடு-அமெரிக்கப் பண்பாட்டில் அவை கொண்டுள்ள தொன்மவியல் மற்றும் குறியீட்டுப் பொருள்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன.

நடு அமெரிக்கக் கட்டிடக்கலையின் இன்னொரு முக்கிய அம்சம் அதன் படிமவியல் ஆகும். நடு-அமெரிக்காவின் கட்டிடக்கலை, சமயம் மற்றும் பண்பாட்டுத் தொடர்புடைய சிற்பங்களால் அழகு செய்யப்பட்டிருப்பதுடன், பல வேளைகளில் அவற்றுடன்கூட நடு-அமெரிக்க எழுத்து முறைமைகளிலான எழுத்துக்களையும் கொண்டுள்ளன. கட்டிடங்களிலுள்ள சிற்பங்கள் மற்றும் எழுத்துக்கள், கொலம்பசுக்கு முற்பட்ட நடு-அமெரிக்கச் சமூகம், அதன் வரலாறு, சமயம் என்பவைபற்றி நாம் அறிந்துகொள்ளப் பெரிதும் உதவியாக உள்ளன.

Remove ads

காலவரிசை

பின்வரும் பட்டியல், நடு-அமெரிக்கக் கட்டிடக்கலையினதும் தொல்லியலினதும் பல்வேறு காலகட்டங்களைத் தருவதுடன், ஒவ்வொரு காலகட்டத்திலுமான குறிப்பிடத்தக்க பண்பாடுகள், நகரங்கள், பாணிகள் மற்றும் தனிப்பட்ட கட்டிடங்கள் என்பவற்றோடு அவற்றின் தொடர்புகளையும் எடுத்துக் காட்டுகிறது.

மேலதிகத் தகவல்கள் காலம், காலப்பகுதி ...
Remove ads

நகரத் திட்டமிடலும், அண்டவியல் நோக்கும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads