நந்திகோட்கூர்

ஆந்திராவிலுள்ள ஒரு கிராமம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நந்திகோட்கூர் (Nandikotkur) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சியும், மண்டலமும் ஆகும்.

விரைவான உண்மைகள் நந்திகோட்கூர், நாடு ...
Remove ads

நிலவியல்

நந்திகோட்கூர் 15.8667°N 78.2667°E / 15.8667; 78.2667 இல் அமைந்துள்ளது.[2] இது கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 292 மீட்டர் (961 அடி) உயரத்தில் உள்ளது. கிருஷ்ணா ஆறு அருகிலுள்ளது.

நந்திகோட்கூர் என்பது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கர்னூல் மாவட்டத்திலிருந்து 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு மண்டலமாகும். கர்னூல், குண்டூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து மையமாக இது செயல்படுகிறது. கர்னூலில் இருந்து ஸ்ரீசைலம் செல்லும் பாதை நந்திகோட்கூர் வழியாகவும் செல்கிறது. நந்திகோட்கூர் ஒன்பது நந்தி சிலைகளால் (காளைகள்) சூழப்பட்டிருப்பதாக புராணம் கூறுகிறது. எனவே இந்த இடம் முன்பு நவநந்திகோட்கூர் என்றும் இப்போது நந்திகோட்கூர் என்றும் அழைக்கப்படுகிறது. கர்னூல், அனந்தப்பூர், கடப்பா , சித்தூர் மாவட்டங்களுக்கு பாசன நீர் வழங்கும் ஹந்த்ரி நீவா கால்வாய், நதிகோட்கூர் மண்டலத்தில் இருந்து தொடங்குகிறது. நந்திகோட்கூரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் ஏழு நதிகள் சங்கமிக்கும் சங்கமகேசுவரம் அமைந்துள்ளது. நந்திகோட்கூரின் மக்கள் தொகை 46,953 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றனர்.

Remove ads

போக்குவரத்து

ஆந்திர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகம் நந்திகோட்கூர் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவைகளை இயக்குகிறது.[3]

கல்வி

மாநில பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளால் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிக் கல்வி கற்பிக்கப்படுகிறது.[4][5] வெவ்வேறு பள்ளிகள் ஆங்கிலம், தெலுங்கு மொழிகளை பயிற்றுவிக்கிறது..

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads