சித்தூர் மாவட்டம்

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சித்தூர் மாவட்டம் (தெலுங்கு: చిత్తూరు జిల్లా) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் சித்தூர் நகரில் உள்ளது. 15,359 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில், 2011-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 4,170,468 மக்கள் வாழ்கிறார்கள். இதன் வடமேற்கில் அனந்தபூர் மாவட்டமும் வடக்கில் கடப்பா மாவட்டமும் வடகிழக்கில் நெல்லூர் மாவட்டமும் தெற்கில் தமிழ்நாடு மாநிலமும் மேற்கில் கர்நாடக மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

விரைவான உண்மைகள் சித்தூர் மாவட்டம் చిత్తూరు జిల్లా, நாடு ...

1905-ஆம் ஆண்டு வட ஆற்காடு, கடப்பா, நெல்லூர் மாவட்டங்களில் இருந்து சித்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இங்கு தமிழ் பேசுவோரும் தெலுங்கு பேசுவோரும் சம அளவில் உள்ளனர் பெரும்பான்மையாக தமிழ் பேசுவோர் சித்தூர் மாவட்டத்தின் வேங்கட மலைக்கு தெற்கே வசிக்கின்றனர் சித்தூர் மாவட்டம் ஆந்திராவோடு இணைக்கப்பட்டாலும் நகரி திருப்பதி திருமலை நாராயணவரம் போன்ற மண்டலங்களில் தமிழ் பேசுவோர் அதிக அளவில் உள்ளனர்.

Remove ads

மாவட்டம் பிரிப்பு

4 ஏப்ரல் 2022 அன்று இம்மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு புதிய அன்னமய்யா மாவட்டம் மற்றும் திருப்பதி மாவட்டம் நிறுவப்பட்டது.[2][3]

ஆட்சிப் பிரிவுகள்

இந்த மாவட்டத்தில் சித்தூர், திருப்பதி ஆகிய இரண்டு பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன.[4]

ஆந்திர மாநில சட்டமன்றத்திற்கான 14 தொகுதிகள் இங்குள்ளன. அவை தம்பள்ளபள்ளி, பீலேரு, மதனபள்ளி, புங்கனூர், சந்திரகிரி, திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி, சத்தியவேடு, நகரி, கங்காதர நெல்லூர், சித்தூர், பூதலபட்டு, பலமனேரு, குப்பம் ஆகியன.[4]

இந்த மாவட்டத்தில் சித்தூர், திருப்பதி, மதனபள்ளி ஆகிய மூன்று வருவாய்க் கோட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தில் திருப்பதி, சித்தூர் ஆகிய ஊர்கள் மாநகராட்சிகளாகும். மதனபள்ளி, காளஹஸ்தி, புங்கனூர், பலமனேரு, புத்தூர், நகரி ஆகிய ஊர்கள் நகராட்சிகளாகும்.

இந்த மாவட்டத்தை 66 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். மொத்தமாக 1399 ஊர்கள் உள்ளன. [5].

1 பெத்தமண்டியம்23 கே. வி. பி. புரம்45 நகரி
2 தம்பள்ளபள்ளி24 நாராயணவனம்46 கார்வேட்டிநகரம்
3 முலகலசெருவு25 வடமாலபேட்டை47 ஸ்ரீரங்கராஜபுரம்
4 பெத்ததிப்ப சமுத்திரம்26 திருப்பதி ஊரகம்48 பாலசமுத்திரம்
5 பி. கொத்தகோட்டை27 ராமசந்திராபுரம்49 கங்காதர நெல்லூர்
6 குரபலகோட்டை28 சந்திரகிரி50 பெனுமூர்
7 குர்ரங்கொண்டா29 சின்னகொட்டிகல்லு51 பூதலபட்டு
8 கலகடா30 ரொம்பிசெர்லா52 ஐராலா
9 கம்பம்வாரிபள்ளி31 பீலேரு53 தவனம்பள்ளி
10 யெர்ராவாரிபாலம்32 கலிகிரி54 சித்தூர்
11 திருப்பதி நகரம்33 வாயல்பாடு55 குடிபாலா
12 ரேணிகுண்டா34 நிம்மன்னபள்ளி56 யாதமரி
13 ஏர்ப்பேடு35 மதனபள்ளி57 பங்காருபாலம்
14 ஸ்ரீகாளஹஸ்தி36 ராமசமுத்திரம்58 பலமனேரு
15 தொட்டம்பேடு37 புங்கனூர்59 கங்கவரம்
16 புச்சிநாயுடு கண்டுரிகா38 சௌடேபள்ளி60 பெத்தபஞ்சனி
17 வரதய்யபாலம்39 சோமலா61 பைரெட்டிபள்ளி
18 சத்தியவேடு40 சோதம் (சதும்)62 வெங்கடகிரி கோட்டை
19 நாகலாபுரம்41 புலிசெர்லா63 ராமகுப்பம்
20 பிச்சாடூர்42 பாகாலா64 சாந்திபுரம்
21 விஜயபுரம்43 வெதுருகுப்பம்65 குடுபள்ளி
22 நிந்திரா44 புத்தூர்66 குப்பம்
Remove ads

குறிப்பிடத்தக்க நகரங்கள்

நிகழ்வு

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சித்தூர் மாவட்ட மேயர் கட்டாரி அனுராதா 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி அன்று சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.[6]

இவற்றையும் பார்க்கவும்

சான்றுகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads