நந்தியாவட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நந்தியாவட்டை அல்லது நந்தியார்வட்டை (Ervatamia divaricata, Tabernaemontana divaricata, Crepe jasmine, East Indian Rosebay, Nandivrksah) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும்.
இந்தச் செடி சுமார் 1.5 - 2.5 மீட்டர் உயரம் வளரும். பூக்கள் வெண்மை நிறத்துடன், வாசனையுடன் கூடியவை. இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும். வேர், பூ, இலை மற்றும் அதிலிருந்து வடியும் பால் இவை அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தவை.
பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் வீட்டின் முன்பகுதியில் அதன் மருத்துவ குணம் தெரியாமல் பலரும் இதை வளர்த்து வருகின்றனர்.
சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகச் சொல்லப்பட்டுள்ள 99 மலர்களில் 'நந்தி' என்னும் பெயரால் நந்தியாவட்டை மலர் சுட்டப்பட்டுள்ளது.[2]
Remove ads
நந்தியாவட்டை எண்ணெய்
நந்தியாவட்டையின் இலைகளை நன்றாக அலசிச் சுத்தமாக்கி, இடித்துச் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வடித்து நந்தியாவட்டை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. கண் எரிச்சல், கண்பார்வை மங்குதல் என்பவற்றுக்கு இது கண்ணில் ஒரு துளி (மூலிகை மருத்துவம் தெரிந்தவரின் மருத்துவ ஆலோசனை பின்பற்றப்பட வேண்டும்) விடப்படுகிறது. சரும நோய்களுக்கும் தடவலாம்.[சான்று தேவை]
இவற்றையும் காண்க
அடிக்குறிப்பு
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads