நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia

Remove ads

நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் சிங்கப்பூரில் ஒரு மிக பிரம்மாண்டமான பல்கலைக்கழகம். இது சிங்கப்பூரின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்று. ஆசிய அளவில் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. [4]

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
விரைவான உண்மைகள் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சீனப் பெயர் ...
Remove ads

வளாகங்கள்

Thumb
நிர்வாகக் கட்டிடம்
Thumb
சீனப் பண்பாட்டு மையம், முன்னர் நிர்வாகக் கட்டிடமாக செயல்பட்டது

இதன் முதன்மை வளாகத்திற்கு யுன்னான் வளாகம் என்று பெயர். இது 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது ஜுரோங் மேற்கு மாவட்டத்திற்கு அருகில் உள்ளது.

பள்ளிகளும், கல்லூரிகளும்

இந்த பல்கலைக்கழகத்தில் 15 பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு துறைகளைக் கற்பிக்கின்றன. [5]

  • பொறியியல் கல்லூரி
உலகின் பெரிய பொறியியல் கல்லூரி எனப் போற்றுகின்றனர். இங்கு பத்தாயிரத்திற்கும் அதிகமான இள நிலை மாணவர்களும், 3,500 முதுநிலை மாணவர்களும் பயில்கின்றனர். [6]

இங்கு கீழ்க்கண்ட பள்ளிகள் உள்ளன.

  • வேதியியல், உயிர்வேதிப் பொறியியல் பள்ளி
  • கட்டிடப் பொறியியல், சுற்றுச்சூழலியல் பள்ளி
  • கணிப்பொறியியல் பள்ளி
  • மின், மின்னணுப் பொறியியல் பள்ளி
  • மெட்டீரியல் சைன்ஸ், பொறியியல் பள்ளி
  • இயந்திரப் பொறியியல், வானூர்திப் பொறியியல் பள்ளி


  • நன்யாங் வணிகப் பள்ளி
இது சிங்கப்பூரின் முன்னணி வணிகப் பள்ளியாகத் திகழ்கிறது. இங்கு மேலாண்மைக் கல்வியில் முதுநிலைப் பாடங்களைக் கற்பிக்கின்றனர்.


  • அறிவியல் கல்லூரி

இங்கு இரண்டு பள்ளிகள் உள்ளன. ஒன்றில் உயிரியல் பாடங்களையும், இன்னொன்றில் இயற்பியல், கணிதம், வேதியியல் பாடங்களையும் கற்பிக்கின்றனர்.


  • லீ கோங் சியான் மருத்துவப் பள்ளி

லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியுடன் இணைந்து செயலாற்றுகிறது.


  • கலை, சமூக அறிவியல், மாந்தவியல் கல்லூரி
Thumb
கலை, ஊடகம், வடிவமைப்புப் பள்ளி


இங்கு மாந்தவியல், கலை, சமூகவியல் ஆகிய துறைகள் உள்ளன. மாந்தவியல் துறையில் சீன மொழி, பொருளாதாரம், வரலாறு, மொழியியல் ஆகிய பாடங்களைக் கற்பிக்கின்றனர்.

Remove ads

கல்வி

இள நிலைக் கல்வி

இங்கு 23,500 பேர் கல்வி கற்கின்றனர். இவர்களில் 80% பேர் சிங்கப்பூர் குடிமக்கள் ஆவர். மீதமுள்ளோர் தெற்காசிய, தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மாணவர்களுக்கான கல்விச் செலவில் பெருந்தொகையை சிங்கப்பூர் அரசு செலுத்துகிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த மாணவர்கள் 27 % கட்டணத்தை மட்டும் கட்டினால் போதும். [7] வேற்று நாட்டு மாணவர்களுக்கும் கட்டண சலுகை கிடைக்கும். அந்த சலுகையைப் பெற, சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றுவதாக உறுதி அளிக்க வேண்டும். [8]

உயர்நிலைக் கல்வி

இங்கு 10,000 மாணவர்கள் முது நிலைக் கல்வியும், முனைவர் படிப்பையும் மேற்கொள்கின்றனர். இங்கு உலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். சில துறைகளில் சேர்வதற்கு தகுதிகள் தேவைப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஜி.ஆர்.இ, ஜிமேட் ஆகியன. ஆங்கிலம் பேசாத நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆங்கிலத்திற்கான சிறப்புத் தேர்வில் (டோஃபெல்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். [9]

பட்டங்கள்

இள நிலைப் பட்டங்கள்: [10]

  • கணக்கியல்
  • வணிகம்
  • கவின் கலை
  • அறிவியல்
  • பொறியியல்
  • கலை
  • தொடர்பாடல்

முது நிலைப் பட்டங்கள்:

  • வணிகம்
  • வணிக நிர்வாகம்
  • அறிவியல்
  • கலை
  • கல்வி
  • கல்வித் துறை நிர்வாகம்
  • பொறியியல்
  • பொது நிர்வாகம்
  • பயன்பாட்டு அறிவியல்
  • தொடர்பாடல் கல்வி

முனைவர் பட்டங்கள்:

  • மெய்யியல்
  • கல்வி

முன்னாள் மாணவர்கள்

  • க. குணாளன் - முன்னாள் தேசிய விளையாட்டு வீரர்

மேலும் பார்க்க

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads