நயாகரா அருவி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நயாகரா அருவி என்பது வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க ஒரு பேரருவி. இது உலகத்திலேயே உள்ள அருங்காட்சிகளில் ஒன்றாக போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் இதனைப் பார்க்க 10 மில்லியன் மக்கள் வருகின்றனர். இப்பேரருவி கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமான எல்லையில் ஓடும் சுமார் 56 கி.மீ நீளமுள்ள நயாகரா ஆற்றின் பாதி தொலைவில் அமைந்துள்ளது. இது தனியான இரண்டு பெரிய அருவிகளைக் கொண்டது. சுமார் 85% நீர் கனடாவில் உள்ள ஹோஸ் (ஹார்ஸ்) ஷூ அருவி என ஆங்கிலத்தில் வழங்கப்படும் குதிரை இலாட அருவியிலும், மீதம் உள்ளது அமெரிக்கப் பகுதியில் உள்ள அமெரிக்கன் அருவியிலும் விழுகின்றது. இவை இரண்டும் அல்லாமல் ஒரு சிறிய பிரைடல் வெய்ல் அருவியும் உண்டு. குதிரை இலாட அருவி 792 மீ அகலம் கொண்டது, உயரம் 53 மீ. அதிக உயரமானதாக இல்லாவிடினும் நயகாரா அருவியானது மிகவும் அகலமானது. அமெரிக்கன் அருவி 55 மீ உயரமும், 305 மீ அகலமும் கொண்டது. நயாகராப் பேரருவியில் ஆறு மில்லியன் கன அடிக்கு (168,000 m³) அதிகமான நீரானது ஒவ்வொரு நிமிடமும் இந்த அருவியினூடு பாய்ந்துசெல்கிறது. உலகில் மிகவும் பரவலாக அறியப்பட்ட இந்த அருவியானது வட அமெரிக்காவின் அதிசக்தி வாய்ந்த அருவியாகவும் இருக்கிறது.[1][2][3]
இப்பேரருவி சுமார் 12,000 ஆண்டுகளுக்கும் முன்னர் தோன்றியது என்றும், முன்பு இப்பொழுதிருக்கும் இடத்தில் இருந்து 11 கி.மீ தொலைவில் உள்ள லூயிஸ்டன் (Lewsiston) என்னும் இடத்தில் இருந்ததாகவும் கருதப்படுகிறது. அமெரிக்கவின் வட கிழக்கிலே உள்ள ஐம்பெரும் நன்னீர் ஏரிகளில் உள்ள மூன்று ஏரி நீரும் சிறிய ஏரியாகிய ஈரி என்னும் ஏரியின் வழியாக பாய்கின்றது. இந்த ஈரி ஏரியில் இருந்து நீரானது அதைவிட கீழான நிலப்பகுதியில் அமைந்துள்ள உள்ள ஒன்டாரியோ ஏரியில் விழுகின்றது, இப்படிப் பாயும் ஆறுதான் சிறு நீளம் கொண்ட நயாகரா ஆறு.
அழகிற்கு பெயர்போன நயாகரா அருவி நீர் மின்சாரத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குமான ஒரு பெறுமதிமிக்க இயற்கை மூலமாகும். இயற்கை அதிசயமான நயகாரா அருவியின் இரட்டை நகரங்களான நயாகரா ஃபால்ஸ் (நியூ யோர்க்), நயாகரா ஃபால்ஸ்(ஒன்டாரியோ) ஆகியவற்றை உள்ளடக்கிய நிலப்பகுதி கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக புகழ் பெற்ற ஒரு சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. நீரோடத்தை மின்னாற்றல் ஆக மாற்ற இங்குள்ள ராபர்ட்டு மோசசு (Robert Moses) மின் நிலையமும், ஆடம் பெக் (Adam Beck) என்னும் இரு மின் நிலையங்களும் சேர்ந்து 4 கிகா வாட் (4,000,000 கிலோ வாட்) மின்னாற்றல் உற்பத்தி செய்கின்றன. இது நீரோட்டத்தைப் பயன்படுத்தி ஆக்கும் மின்னாற்றல் ஆகையால், சுற்றுப்புறம் சூழலில் பெருங்கேடு ஏதும் விளைவிப்பதில்லை.
Remove ads
சிறப்பியல்புகள்
குதிரை லாட நீர்வீழ்ச்சி சுமார் 173 அடியிலிருந்து (53 மீ) விழுகிறது. அமெரிக்க நீர்வீழ்ச்சியின் உயரம் அதற்கு கீழே இருக்கும் பெரிய கற்பாறைகளால் வேறுபடுகிறது. இதன்காரணமாக நீர்வீழ்ச்சியின் உயரம் 70-100 அடி (21-30 மீ) என வேறுபடுகிறது. பெரிய குதிரை லாட அருவியின் அகலம் 2,600 அடியாகவும் (790 மீ), அமெரிக்க நீர்வீழ்ச்சியின் அகலம் 1.060 அடியாகவும் (320 மீ) இருக்கிறது. நயாகரா நீர்வீழ்ச்சியின் அமெரிக்க உச்சிநிலைக்கும் கனடிய உச்சிநிலைக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 3,409 அடியாகும் (1,039 மீ) ஆகும்.
உச்ச பருவநிலை காலங்களில் நீர்வீழ்ச்சியிலிருந்து விழுகின்ற நீரின் அளவு வினாடிக்கு 202,000 என கன அடி (5,700 மீ 3) அளவு கூட சில சமயங்களில் இருக்கிறது. இவ்வாறு நீர்வீழ்ச்சியில் விழுகின்ற நீரானது அதிரிப்பதன் காரணமாக எறீ (Erie) ஏரியின் நீர்மட்ட உயர்வும் அதிகமாகிறது, எனில் இவை நேரடியாக தொடர்பில் உள்ளன. இந் நிகழ்வு பொதுவாக வசந்த காலத்தின் பிற்பகுதி அல்லது கோடையின் துவக்கத்தில் நிகழ்கிறது.
நயாகரா அருவியை விட உலகில் ஐநூறுக்கும் மேற்பட்ட உயரமான அருவிகள் இருந்தாலும் அவை குறைந்த அளவு நீரையே தருகின்றன. நயாகரா அருவியின் உயரமும் கொள்ளவும் சேர்ந்தே அதற்கு பெரும்புகழைத் தேடித்தந்தன. வெனிசுலாவில் உள்ள தேவைதை அருவியே 979 மீட்டர்கள் உயரத்தோடு உலகின் மிக உயரம் கொண்ட அருவியாக இருக்கிறது.
Remove ads
மெயிட் ஆஃப் த மிஸ்ட் (Maid of the Mist)
மெயிட் ஆஃப் த மிஸ்ட் என்பது 3 அருவிகளையும் படகு மூலம் காட்டும் நிகழ்வுக்கு பெயராகும். இப்படகு மூலம் குதிரை லாட அருவி அருகே செல்ல முடியும். அமெரிக்கப் பகுதியிலிருந்தும் கனேடியப் பகுதியிலிருந்தும் இதற்கான படகுகள் செல்கின்றன.
கேவ் ஆப் த வின்ட்ஸ் ( Cave of the Winds )
பிரைடல் வெய்ல் அருவி அமெரிக்கப் பகுதியில் அமெரிக்கன் அருவிக்கு அருகில் உள்ளது. இவ்வருவியை கீழிருந்து பார்க்க மரப் படிக்கட்டுகள் அமைத்துள்ளார்கள்.
வானவில் பாலம் (Rainbow Bridge)
வானவில் பாலம் என்றழைக்கப்படும் இப்பாலம் நயாகராவில் அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கிறது. இது நயாகரா அருவி அருகில் உள்ளது.
புவியியல்
இவ்வருவி 10,000 ஆண்டுகளுக்கு முன் விசுகான்சின் பனியாற்றின் மூலம் உருவானது. இப்பனியாறே அமெரிக்கப் பேரேரிகள் உருவானதற்கு காரணமாகும்.
வரலாறு
நயாகரா என்ற பெயர் எப்படி இவ்வருவிக்கு வந்தது என்பது பற்றி பல்வேறு கருத்துகள் உள்ளன. பிரூசு டிரிக்கர் என்ற அறிஞரின் கூற்றுப்படி இது இப்பகுதியில் வாழ்ந்த பழங்குடிகள் நயாக்கராராகே என்று அழைக்கப்பட்டார்கள் அதன் மூலம் வந்திருக்கலாம் என்கிறார். ஜியார்ஜ் சூடுவர்ட் என்ற அறிஞர் பழங்குடிகளின் நகரான ஓங்னியாகரா என்பதில் இருந்து வந்திருக்கலாம் என்கிறார். என்றி சுகுல்கிராப்ட் என்ற அறிஞர் இது மோகாக் என்ற பழங்குடியினரின் சொல் என்கிறார்.
Remove ads
வணிகம்
மின் ஆற்றல்
நயாக்கரா அருவியின் ஆற்றல் மின் உற்பத்திக்கு உகந்தது என அறியப்பட்டது. இவ்வருவியின் நீரை முதலில் கட்டுக்குள் கொண்டு வர 1759ல் முயன்றார்கள்.
போக்குவரத்து
அருவி மீது சாகசம்
குதித்தல்
நடத்தல்
பொழுதுபோக்கு
சுற்றுலா
இந்த அருவியில் கோடை காலத்தில் காலை மாலை என இரு பொழுதுகளிலுமே அதிக பார்வையாளர்கள் வருகிறார்கள். கனடா நாட்டிலுள்ள நயாகராவின் பகுதியில் வெள்ளொளிகளை அருவியின் இரண்டு பக்கத்தில் இருந்துமே பாய்ச்சுகிறார்கள். இது வழக்கமாக நள்ளிரவு வரை நீடிக்கிறது. கி .பி. 2007ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு கோடி பார்வையாளர்கள் இங்கு வந்து சென்றார்கள். கி .பி. 2009ஆம் ஆண்டில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 2.8 கோடியாக கூடியது. பல காலமாகவே இப்பகுதியில் நடக்கும் "மெய்டு ஆஃப் தி மிசுடு" படகோட்டம் மிகப் பிரபலம். இந்த நிகழ்வு கி .பி. 1846ஆம் ஆண்டு முதலேயே நடத்தப்படுகிறது.
Remove ads
படத்தொகுப்பு
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads