நயினார்கோயில் நாகநாதர் கோயில்
தமிழ்நாட்டின் நாயனார்கோவிலில் உள்ள இந்து கோவில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நயினார்கோயில் நாகநாதர் கோயில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகில் உள்ள நயினார்கோயில் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1][2]
Remove ads
அமைப்பு
இக்கோயிலில் சிவன், பார்வதி, முருகன், தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள், ஒரே சன்னதியில் மூன்று விநாயகர்கள் உள்ளனர். முன் கோபுரம் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளது. இங்குள்ள நாகநாதர் துலாக்கோல் போல் உள்ளவர் என்று கூறுகின்றனர். திரிசங்கு சொர்க்கம் செல்ல விரும்பி தன் குரு வசிஷ்டரிடம் கூறினார். அதற்கு ஒரு வருடமாவது யாகம் செய்ய வேண்டும் என்றார். அதனை அவர் ஏற்காததால் திரிசங்குவை புலையனாகும்படி சபித்தார். விசுவாமித்திரரிடம் திரிசங்கு இதிலிருந்து நீங்குவதற்கான வழியைக் கேட்டார். நமச்சிவாய மந்திரத்தை உச்சரிப்பதன் மூலமாகவும், யாகம் நடத்துவதன் மூலமாகவும் அதன்படி ஒரே நாளில் சொர்க்கம் செல்லலாம் என்று அவர் கூறினார். யாகத்தை நடத்த வரும்படி வசிஷ்டரின் புத்திரர்களை கேட்டுக்கொண்டார். அவர்களோ சாபம் பெற்றவருக்காக யாகம் நடத்தமுடியாது என்று மறுத்தனர். அவர்களை வேடர்களாகும்படி அவர் சபித்தார். சாப விமோசனம் வேண்ட தெற்கேயுள்ள காட்டில் சிவ பூசை செய்து விமோசனம் பெறலாம் என்றார். அவர்களும் அவ்வாறே விமோசனம் பெற்றனர். இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2] [3]
Remove ads
திருவிழாக்கள்
இறைவிக்கு ஆடியில் 15 நாளும், இறைவனுக்கு வைகாசியில் 10 நாளும் பிரம்மோற்சவம் நடத்தப்பெறுகின்றன. இவை தவிர பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட பல விழாக்கள் நடத்தப்படுகின்றன.[2] இக்கோயிலில் காரணாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.
படத்தொகுப்பு
- நாகநாதர் கோயிலின் கம்பீரமான காளை வாகனம்
- நாகநாதர் கோயில் தேரில் உள்ள மரச்சிற்பங்கள்
- நாகநாத சுவாமி கோயில் மதிலில் சார்த்தியிருந்த வண்டிச்சக்கரம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads