பரமக்குடி
பரமக்குடி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பரமக்குடி (ஆங்கிலம்:Paramakudi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.இது வைகை நதியின் கரையில் அமைந்திருக்கிறது. இந்நகரம் மதுரை - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை எண் 49 இன் மத்தியில் உள்ளது.
Remove ads
வரலாறு
வரலாற்று ரீதியாக இந்த பகுதி பாண்டியர்களின் வம்சத்தால் ஆட்சி செய்யப்பட்டது, இது எந்த அரசரின் தலைமையிடமல்ல, ஆனால் பாண்டியர்களாலும் பின்னர் ராமநாதபுரம் ராஜா சேதுபதியின் ஆட்சியினாலும் ஆட்சி செய்யப்பட்டது. பண்டைய காவிய ராமாயணத்தின் படி, ராம ராமாவுக்கு எதிராக ராவணனுக்கு எதிரான போர் தொடங்கியது, இங்கு 45 நிமிடங்கள் பயணம் செய்யும் சேது கால்வாய். 1964 ஆம் ஆண்டில் பரமக்குடி, எமனேஸ்வரம் ஆகிய இரு நகரங்களையும் இணைத்து பரமக்குடி நகராட்சி உருவாக்கப்பட்டது. பரமக்குடி நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
Remove ads
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 36 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 23,504 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 95,579 ஆகும். அதில் 48,621 ஆண்களும், 46,958 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 90.21 % மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 966 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 9292 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 936 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே மற்றும் ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.55%, இசுலாமியர்கள் 9.20%, கிறித்தவர்கள் 4.11% மற்றும் பிறர் 0.13% ஆகவுள்ளனர்.[4]
Remove ads
போக்குவரத்து வசதிகள்
பரமக்குடி நகரானது ரயில் மற்றும் பேருந்து வசதிகளின் மூலம் மற்ற ஊர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. கொச்சி–ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை (NH 49) நகரின் குறுக்கே அமைந்துள்ளது. மதுரை-பரமக்குடி நான்குவழிச்சாலையும் இந்நகரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து சென்னை, ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, கோவை, திருப்பதி, ஒக்ஹா, புவனேஸ்வர், வாரணாசி உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி ரயில் வசதி உள்ளது. பரமக்குடி ரயில் நிலையம் மாவட்டத்தின் முக்கிய ரயில் நிலையத்தின் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கிருந்து பெரும்பாலான ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து வசதிகள் உள்ளன. அருகில் உள்ள விமான நிலையம் மதுரை ஆகும். இது பரமக்குடியில் இருந்து 83 கி.மீ. தொலைவில் உள்ளது.
வழிபாட்டுத் தலங்கள்
- ஸ்ரீ முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோவில்
- ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில்
- கோதண்டராமர் புனிதப்புளி ஆஞ்சநேயர் ஆலயம்
- ஸ்ரீ சந்திர சேகர சுவாமி கோவில் ( ஈஸ்வரன் கோவில் )
- ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோவில்
- ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில்
- கீழப்பள்ளிவாசல்
- மேலப்பள்ளிவாசல்
- மஸ்ஜிதே நூர் மசூதி (தெற்குப்பள்ளிவாசல்)
- மாதவன் நகர் பள்ளிவாசல்
- பாரதி நகர் பள்ளிவாசல்
- ஐந்துமுனை முருகன் கோவில்
- எமனேஸ்வரமுடையவர் கோவில்
- டி.இ.எல்.சி சர்ச்
- அலங்கார மாதா ஆலயம்
- அன்வாருல் ஹுதா ஜும்மா மஸ்ஜித் (நேரு நகர்)
- சுந்தரராஜ பட்டினம் ஜும்மா பள்ளிவாசல்
- வரதரராஜ பெருமாள் கோவில் (எமனேஸ்வரம்)
Remove ads
சிறப்புகள்
பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிவப்பு குடை மிளகாய் விளைச்சலில் சிறப்பு பெற்றதாகும். இங்கு விளைவிக்கப்படும் பருத்தி இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.மொத்த தமிழகத்திற்குமான மிளகாய் விலை இங்கு தான் நிர்ணயிக்கப்படுகிறது.[சான்று தேவை]
பரமக்குடி மற்றும் எமனேஸ்வரம் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான சௌராஷ்டிரா இன மக்கள் அசல் பட்டு ஜரிகை மற்றும் அனைத்து வித கைத்தறி சேலைகளை உற்பத்தி செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் இந்தியா மட்டுமின்றி மலேசியா , சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்ப்படுகிறது.[சான்று தேவை]
Remove ads
பிரபலங்கள்
ஜவ்வாதுப் புலவர் பரமக்குடி கீழப்பள்ளிவாசல் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பரமக்குடி பிரபலமான திரைப்பட நடிகர்களின் பிறந்த ஊராகும். குறிப்பாக இந்திய திரைப்பட நடிகர் கமல் ஹாசன் மற்றும் அவரது குடும்பமான சந்திரஹாசன் மற்றும் சாருஹாசன் ஆகியோர் திரைப்பட நடிகர்களாகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் உள்ளனர். சுஹாசினி பரமக்குடியில் நடிகர் சாருஹாசனுக்கு பிறந்தவர்.
புகழ்பெற்ற வினோத்ராஜ் (தமிழ் நடிகர்) ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் கில்லி உட்பட பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரது மகன் பிரபல இந்திய நடிகர் விக்ரம் ஆகியோரின் சொந்த ஊர் இதுவே ஆகும்.
Remove ads
அரசியல்
- சட்டமன்ற தொகுதி - பரமக்குடி (பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது)
- நாடாளுமன்ற தொகுதி - இராமநாதபுரம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads