நரசிம்ம ஜெயந்தி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நரசிம்ம ஜெயந்தி (Narasimha Jayanthi), திருமாலின் நான்காவதான நரசிம்மரின் அவதாரத் திருநாளாகும். 2017இல் நரசிம்ம ஜெயந்தி மே 9ஆம் நாள் கொண்டாடப்பட்டது.[1]
நரசிம்ம ஜெயந்தி அல்லது அவதார நோக்கம்
நரசிம்ம ஜெயந்தி அல்லது நரச்சிம்ம அவதாரத்தின் முக்கிய நோக்கம், அரக்கர் குல மன்னர் இரணியகசிபின் அதர்மமான கொடுஞ்செயல்களை களைந்து பூலோகத்தில் தருமத்தை நிலைநாட்டவும், இரணியகசிபு தான் பெற்ற வரங்களின் படியும், மேலும் தனது தீவிர பக்தன் பிரகலாதன், தான் வணங்கும் விஷ்ணு தொடர்பாகக் கூறிய கூற்றை மெய்ப்பிக்கவும், திருமால் சிங்கத் தலையும், மனித உடலுடன் நரசிம்மர் வடிவத்தில், தூணைத் தகர்த்துக் கொண்டு அவதாரம் எடுத்து இரணியகசிபை வீழ்த்த வேண்டிய சூழ்நிலை உண்டானது. [2]
Remove ads
நரசிம்ம ஜெயந்தி விழா நாள்
வடவர்களின் வைசாக மாதத்தின் வளர்பிறை, 14ஆம் நாளான்று (ஏப்ரல்-மே) இரணியகசிபை வீழ்த்தி, பூலகில் தருமத்தையும், தனது பக்தன் பிரகலாதனையும் காத்தருள நரசிம்மர் அவதரித்தாக இந்துக்கள், குறிப்பாக வைணவர்கள் கருதுகின்றனர். இந்துக்கள் நரசிம்ம ஜெயந்தி அன்று ஒரு நாள் விரதம் மேற்கொண்டு, நரசிம்மர் எழுந்தருளியுள்ள பெருமாள் கோயில்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads