நரந்தம்

From Wikipedia, the free encyclopedia

நரந்தம்
Remove ads

நரந்தம் வாசனை திரவியங்களுக்காகவம், அதன் சுவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில் நரந்தங்காயை ஊறுகாயாக செய்து சாப்பிடுகின்றனர்.

Thumb
நரந்த பழம்
விரைவான உண்மைகள் நரந்தம், உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

சங்க காலம்

இதன் மலர் பற்றிய செய்திகள் சங்கப்பாடல்களில் உள்ளன.

  • சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகத் தொகுக்கப்பட்டுள்ள 99 மலர்களில் நரந்தமலரும் ஒன்று.[2]
  • சங்ககாலப் புலவர் நக்கீரர் இதனை ‘நரந்த நறும்பூ’ எனத் தெளிவுபடுத்தியுள்ளார். கலை என்னும் ஆண்குரங்கு துள்ளி விளையாடும்போது நறுமணம் மிக்க நரந்த மலர்கள் புலிபோல் பூத்துக் குலூங்கும் வேங்கை மலர்களோடு சேர்ந்து உதிருமாம்.[3]
  • சோலையில் பூத்துக் குலுங்கும்.[4]
  • காடெல்லாம் வண்டு மொய்க்கப் பூத்துக் குலுங்கும்.[5]
  • நரந்தம் பூவைக் கோதையாகக் கட்டி, யாழின்மேல் சுற்றிவைப்பார்களாம்.[6]
  • நரந்தம் என்பது மணத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட பொருள்களில் ஒன்று.[7]
  • அதியமான் நரந்தம் மணக்கும் தன் கையால் புலவு நாறும் தன்னுடைய கூந்தலைக் கோதிவிட்டான் என ஔவையார் கூறுகிறார்.[8]
  • நரந்தத்தை அரைத்துக் கூந்தலில் பூசிக்கொள்வர்.[9][10][11]
  • இமயமலைச் சாரலில் கவிர் என்னும் முருக்கம்பூ பூத்துக்கிடக்கும் காட்டில் உறங்கும் கவரிமான் நரந்தம் மேயக் கனவு காணுமாம்.[12]
  • புகார் நகரத்து மலர்வனத்தில் பூத்திருந்த மலர்களில் ஒன்று நரந்தம்.[13]
  • நரந்த மணம் வீசும் கூந்தல்.[14]
Remove ads

இவற்றையும் காண்க

சங்ககால மலர்கள்

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads