நறவம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நறவம் என்பது ஒரு மலர்.[1]
- நறவம்பூ கொத்துக்கொத்தாகப் பூக்கும்.[2]
- சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று நறவ-மலர்.[3]
- தேன்
- நறவம் என்னும் சொல் மலரிலுள்ள தேனை உணர்த்துகிறது.[4]
- கள்
- நறவு, நறாஅ, நறா என்னும் சொற்கள் ஒருவகைக் கள்ளை உணர்த்துவன.
- போர்க்களம் செல்லும் படைவீரர்களுக்கு ‘தீந்தண் நறவம்’ கொடுத்தனர் [5] என்னும்போது ‘நறவம்’ என்னும் சொல்லும் கள்ளை உணர்த்துகிறது.
- அற்ப வாழ்க்கையை விரும்புபவர்கள் நறவம் ஊற்றிக் குடிப்பர்.[6]
Remove ads
நறை
நறவம் மலரை நறை எனவும் வழங்கிவந்தனர்.
- நறை என்றாலே மணம் என்று பொருள்.[7]
- மலைக்குறவர் மக்கள் நறைக்கொடியை அறுத்தெறிவர்.[8]
- நறைக்காயை உருட்டி வேலன் குறி சொல்லுவான்.[9]
- புனத்தில் எரியும்போது மணக்கும்.[10]
- மணம் கமழும் கொடி.[11]
- கோலால் தட்டியும் நறைக்கொடியில் மணம் பெறுவர்.[12]
- தொழுவத்தைச் சுற்றிலும் நறைக்கொடி படர்ந்திருக்கும்.[13]
- ஏறு தழுவலின்போது காளைகளுக்கு நறைக்கொடி சுற்றிப் பாய விடுவர்.[14]
- மேகம் போல நறைக்கொடி பொங்கிப் படர்ந்திருக்கும்.[15]
- நறவம் பூ குளுமையானது.[16]
- கோடையில் நறைக்கொடி வாடிக் கிடக்கும்.[17]
- சந்தன மரத்தில் நறைக்கொடி படர்வது உண்டு.[18]
- நறை நாரில் பூத் தொடுப்பர்.[19]
- மாளிகைகளில் நறைக்கொடியைப் புகைத்து மணம் பரப்புவர்.[20]
- நீராடிய பின்னர் நறையைப் புகைத்துக் கூந்தலை உலர்த்துவர்.[21][22][23]
- விழாக்காலத்தில் இதன் மணத்தைப் பரப்புவர்.[24][25]
Remove ads
நறா
நறா என்பது பூவை விளையவைத்த ஒருவகைக் கள். நறாக் கள் அதில் இடும் பூமொட்டுகளுக்கு ஏற்பச் சிறப்பு எய்தும். [26]
இவற்றையும் காண்க
வெளியிணைப்புகள்
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads