நலநுண்ணுயிரி

ஊணாக உட்கொள்ளப்படும் நுண்ணுயிரி From Wikipedia, the free encyclopedia

நலநுண்ணுயிரி
Remove ads

நலநுண்ணுயிரி (probiotic) என்பது ஊணாக உட்கொள்ளப்படும் நுண்ணுயிரிகளாகும். இதை எடுத்துக்கொள்வதால் உயிர்களுக்கு நன்மை விளையும் எனக் கருதப்படுகிறது. இதற்கான அறிவியல் வரையறைகள் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றால் இவ்வாறு குறிப்பிடுகின்றது, “உயிருள்ள நுண்ணுயிரியுணவை தகுந்த அளவில் பேருயிரிகள் எடுத்துக்கொள்ளும் போது, அந்த நுண்ணுயிர்கள், அவற்றை உட்கொள்ளும் உயிருக்கு, உடலின் ஆரோக்கியத்தையும் வேறு பயன்களையும் கொடுக்கும்".

Thumb
நன்செய் நுண்ணுயிரிகளை முதலில் ஆராய்ந்த,
நோபல் பரிசு பெற்ற, இரசிய அறிஞர்
Élie Metchnikoff

மூத்தமனிதன் காலம் தொட்டு நாம் தயிரைப் பயன்படுத்தி வருகிறோம். இத்தயிரானது உரையூற்றப்பட்ட பாலில் இருந்து கிடைக்கிறது. இவ்வுரை முன்பு பெறப்பட்ட தயிரின் சிறியளவாகும். இதற்குள் லாக்டோபாசில்லசு, பைஃபிடோபாக்டீரியம் மற்றும் ச்ட்ரெப்டோகாக்கசு என பல நுண்ணுயிர்கள் இருக்கின்றன.

இதைப் போன்று இப்போது கடைகளில் யோகர்டு, அமிலப்பால் (Acidophilus milk) என நலநுண்ணுயிரிகள் கிடைக்கின்றன.

Remove ads

வரலாறு

நாம் பல நூற்றாண்டுகளாய் தயிரைப் பயன்படுத்துகின்றோம். இவைகளில் நுண்ணுயிர் இருப்பதை அறிந்திலை. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ருசிய அறிவியலறிஞன் இலியா இலிச் மெச்னிகோவ் (எல்லி மெச்சினிகாஃப்), நுண்ணுயிர்களின் நற்பண்புகள் என விவரிக்கிறார். அவர் 1907 இல் குடல் நுண்ணுயிர்க்குவையை மாற்றியமைக்க முடியும் என்றும், தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை பயனுள்ள நுண்ணுயிரிகளுடன் மாற்றீடு செய்யவும் முடியும் என்றும் பரிந்துரைத்தார். உயிர்ப்பகைகளைப் பயன்படுத்தி நோய்களைக் கட்டுப்படுத்தும் முறைக்கு இதை மாற்றாகவும் பயன்படுத்த பல ஆய்வுகள் நடந்த வண்ணமுள்ளன.

Remove ads

செயல்படுமுறை

சில பாக்டீரியாக்கள், குறிப்பாக லாக்டோபாசில்லசு இரைப்பையை அமிலத்தன்மையாக்கி நோய்க்காரணிகளை அழிக்கிறது. இவையே சில சமயங்களில் அதிதேவையான வைட்டமின்களை (உயிர்ச்சத்து B வகை) உற்பத்தி செய்வதில் பங்கு வகிக்கிறது. இதனால் தான் நாம் உயிர்ப்பகைகளைப் பயன்படுத்தும் போது மருத்துவர்கள் சத்துமாத்திரைகளைப் பரிந்துரைக்கின்றனர்.

சில வேளைகளில் கரைக்க முடியாத உணவுகளை நாம் எடுக்கும்போது இவை அதைச் சிதைக்கும் நொதிகளை உற்பத்தி செய்து அதை செரிக்க இவை உதவுகிறது. உதாரணம், கறையான்கள் தாம் உண்ணும் மரத்தினை செரிக்க நுண்ணுயிரியின் நொதி அவசியமாயுள்ளது. இதை இக்கறையானின் உள்ளுள்ள நுண்ணுயிரியானது நிறைவேற்றுகிறது.

Remove ads

பயன்கள்

  • நலநுண்ணுயிரி வயிறு சம்பந்தப்பட்ட பல உபாதைகளுக்கு நிவாரணியாக திகழ்கிறது.
  • குறிப்பாக பேதி, அழற்சி, பெருங்குடல் புற்று நோய்களுக்கும் நிவாரணமளிக்கிறது.
  • மனிதனுக்கும் விலங்குகளுக்கும் தேவையான நொதியுற்பத்தி, உயிர்ச்சத்து B உற்பத்தி ஆகியவற்றில் உதவுகிறது.
  • இந்நுண்ணியிரிகளால் மனித உடல் பின்வரும் உயிர்சத்துகளை தயாரிக்க முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. உயிர்ச்சத்து கே (Vitamin k),[1]இலைக்காடி (folic Acid),[2]உயிர்ச்சத்து பி12 (Vitamin B12).[3]

அறியப்பட்ட நுண்ணுயிர்கள்

லாக்டோபாசில்லசு பல்காரிக்கச், ச்ட்ரெப்டோகாக்கசு லாக்டிசு, லாக்டோபாசில்லசு டெல்புருக்கி, லாக்டோபாசில்லசு அசிடோபிலசு, பைஃபிடொபாக்டீரியம் கேசி, பாசில்லசு கோவாகுலன்சு ஆகியன குறிப்பிடத்தக்க சில நுண்ணுயிர்கள்.[4]

இன்று பயன்படுத்தப்படும் சில நலநுண்ணுயிரிகளின் பேரினங்கள்:

  • இலக்டோபசிலசு (Lactobacillus): இது மிகவும் பொதுவான நலநுண்ணுயிரி. இவை தயிர் மற்றும் பிற புளித்த உணவுகளில் காணப்படலாம். இவற்றின் வெவ்வேறு திரிபுகள் வயிற்றுப்போக்கிற்கும் பாலில் உள்ள சர்க்கரையான இலக்டோசை செரிமானம் செய்ய முடியாதவர்களுக்கும் உதவக்கூடும்.
  • பிஃபிடோபாக்டீரியம் (Bifidobacterium): சில பாற்பொருட்களில் இதைக் காணலாம். இது அழல் குடல் கூட்டறிகுறிக்கு (IBS) உதவுகின்றது.

இவை தவிர சக்ரோமைசிசு போலர்டி (Saccharomyces boulardii) போன்ற சில மதுவ வகைகள் வயிற்றுப்போக்கு மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

Remove ads

குறிப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads