நவநகர் இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நவநகர் இராச்சியம் அல்லது ஜாம்நகர் இராச்சியம் , துணைப்படைத் திட்டத்தினை ஏற்றுக்கொண்டு, பிரித்தானிய இந்தியாவுக்கு கீழ் இருந்த சுதேச சமஸ்தானம் ஆகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் அமைந்த ஜாம்நகர் மாவட்டம் மற்றும் தேவபூமி துவாரகை மாவட்டம் ஆகியவைகளைக் கொண்டது. நவநகர் இராச்சியத்தின் தலைநகரம் ஜாம்நகர் ஆகும். கிபி 1540-ஆம் ஆண்டு முதல் ஜடேஜா இராஜபுத்திர குலத்தினர் இந்த இராச்சியத்தை ஆண்டனர். நவநகர் இராச்சியத்தின் பரப்பளவு 3791 சதுர கிலோ மீட்டர் ஆகும். 1901-இல் இதன் மக்கள் தொகை 3,36,779 ஆகும்.[1]இதன் கிளை துரோல் சமஸ்தானம் ஆகும்.
1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி இந்த நவநகர் இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் இந்தியாவின் பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, நவநகர் இராச்சியம் குஜராத் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
நவநகர் இராச்சிய மன்னர் கே. எஸ். ரஞ்சித்சிங்ஜி ஒரு பன்னாட்டு துடுப்பாட்ட வீரர் ஆவார்.
Remove ads
ஆட்சியாளர்கள்
Remove ads
நகையணிகள் சேகரிப்பாளர்கள்
நவநகர் மகாராஜா ஜாம்சாகிப் மற்றும் கே. எஸ். ரஞ்சித்சிங்ஜி நவரத்தின நகைகள் சேகரிக்கும் பழக்கம் கொண்டவரகள் என்பதால், வைர நகைகள் பற்றிய அறிவு அனுபவ பூர்வமாக கொண்டவர்கள். [2][3] 1934-இல் மகாராஜா திக்விஜய் சிங் தலைப்பாகையில் 61.5 காரட் (12.3 கிராம்) விஸ்கி நிற வைர நகை அணிந்திருந்தார்.[4]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads