நவரசதிலகம்

தமிழ் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நவரச திலகம் (Navarasa Thilagam) 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ் மொழி நகைச்சுவைத் திரைப்படமாகும். இயக்குநர் கம்ரான் இத்திரைப்படத்தை இயக்கினார். மா கா பா ஆனந்த் மற்றும் சிருசுட்டி டாங்கே ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சுதர்சன் வெம்பட்டி இத்திரைப்படத்தை தயாரித்தார். 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நவரச திலகம் திரைப்படம் தயாரிக்கப்பட்டு, 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியானது.

விரைவான உண்மைகள் நவரச திலகம், இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

  • மூர்த்தியாக, மா கா பா ஆனந்த்
  • சித்ராவாக, சிருசுட்டி டாங்கே
  • அலங்காரமாக, கருணாகரன்
  • சித்ராவின் தாயாக, மீரா கிருஷ்ணன்
  • பன்னீர்செல்வமாக, இளவரசு
  • தங்கதுரையாக, ஜெயபிரகாஷ்
  • அடைக்கலமாக, மகாதேவன்
  • நமோ நாராயணாவாக, நமோ நாராயணா
  • திருநாவுக்கரசராக, சித்தார்த் விபின்
  • சித்ராவின் பாட்டியாக, ரேவதி
  • அலங்காரத்தின் மாமாவாக, அமிர்த லிங்கம்,
  • அரசியல்வாதியாக,சேரன் ராஜ்,
  • அருள் பிரசாந்த்தாக,போராளி திலீபன்
  • மீனாட்சியாக,லெட்சுமி ராகுல்
  • பவா லெட்சுமணன்
  • வணக்கம் கந்தசாமி
  • அஞ்சலி வரதராஜன்
Remove ads

தயாரிப்பு

மா கா பா ஆனந்த் இந்த திரைப்படப் படப்பிடிப்பின் போது, ஓரே நேரத்தில் பஞ்சு மிட்டாய், அட்டி மற்றும் தீபாவளி துப்பாக்கி போன்ற படங்களில் ஒப்பந்தமாகியிருந்தார்.[1] இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முக்கியமாக பொள்ளாச்சியில் நடைப்பெற்றது. செப்டம்பர் 2015 இல் படப்பிடிப்பு நிறைவுப் பெற்றது.[2] தென்காசி மற்றும் குற்றாலத்தில் பாடல்களின் படப்பிடிப்பு நடைப்பெற்றது.[3] திரைப்படத்தில் தலைமை கதாப்பாத்திரம், ஒரு முத்தக் காட்சியை படமாக்க மறுத்துவிட்டனர், மேலும் திரைக்கதையின் அசல் கதைகளில் படப்பிடிப்பை வெளியிட இயக்குநர் தவறிவிட்டார் என்று கூறினார்.[4][5]

Remove ads

ஒலிப்பதிவு

இந்த திரைப்படத்தில் ஒலிப்பதிவு செய்து இசையமைத்தவர் சித்தார்த் விபின் ஆவார்.

விரைவான உண்மைகள் நவரச திலகம், ஒலிப்பதிவு சித்தார்த் விபின் ...

வரவேற்பு

நவரச திலகம் என்பது ஒரு நகைச்சுவைத் திரைப்படம் என கூறப்பட்டாலும், நகைச்சுவைக்காக நடித்தவர்கள் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற பத்திரிகை கூறியுள்ளது.[6] "நவரச திலகம்" திரைப்படம் “களவாணி” திரைப்பட வரிசையில் அமைந்த திரைப்படம் என்றும், பொழுதுபோக்கிற்கான திரைப்படம் அல்ல என்றும், ஆனால் பார்வையாளர்களை பெரும்பாலான பகுதிகளில் ஈர்க்கக்கூடிய படம் ஆகும் என்றும் "இண்டியாகிளிட்ஸ்" தனது விமர்சனத்தில் கூறியுள்ளது.[7] இந்த திரைக்கதை அதிக வசனத்தைக் கொண்டு நாடகத்தனமாக உள்ளது என்றும், திரைக்கதையினை படமாக்கியதில் தொய்வு உள்ளது என்றும், ஒரு சில வசனங்கள் அதிக சுவாரசியமாக உள்ளது என்றும் "நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்" தனது விமர்சனத்தில் கூறியுள்ளது. நவரச திலகம், ஒரு அறிமுக தயாரிப்பாளரின் நம்பிக்கைக்குரிய முயற்சி ஆகும்.[8] "சிஃபி" எழுதிய "ஒட்டு மொத்தமாக, நவரச திலகம் என்பது நகைச்சுவை மட்டுமே மீதமுள்ள திரைப்படமாக உள்ளது!".[9]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads