நவாப்கஞ்ச்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நவாப்கஞ்ச் (Nawabganj) என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகர் பாலிகா பரிசத் ஆகும். இது அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 25 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
Remove ads
புவியியல்
நவாப்கஞ்ச் 26°52′N 82°08′E/26.87 °N 82.13 °E ஆழ் கூற்றில் கடல்மட்டத்திலிருந்து 93 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.[1]
மக்கள்தொகை
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நவாப்கஞ்சின் மக்கள் தொகை 17314 ஆகும். இந்த மக்கள் தொகையில் ஆண்கள் 8986 ஆகவும், பெண்கள் 8328 ஆகவும் இருந்தனர். நவாப்கஞ்சின் சராசரி கல்வியறிவு விகிதம் 80.56% ஆக இருந்தது. இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாக உள்ளது. ஆண்களின் கல்வியறிவு 85.61% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 75.17% ஆகவும் இருந்தது. நவாப்கஞ்சில் 12.09% மக்கள் தொகையினர் 6 வயதிற்குட்பட்டவர்கள்.[2]
நவாப்கஞ்ச் நகர் பாலிகா பரிசத்தில் மொத்தம் 2,774 வீடுகளுக்கு மேல் நிர்வாகத்தைக் கொண்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் மற்றும் கழிவுநீர் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. நகரமைப்பிற்குள் சாலைகளை உருவாக்கவும், இதன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட சொத்துக்களுக்கு வரி விதிக்கவும் நவாப்கஞ்ச் நகரமைப்பு அதிகாரம் பெற்றுள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads