தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்
தமிழகத்தில் உள்ள பெரிய மாநகரங்களும் மற்றும் மாவட்ட தலைநகரம் ஆகும் From Wikipedia, the free encyclopedia
Remove ads
Remove ads
தமிழ்நாட்டு மாநகராட்சிகள் தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளாகச் செயல்படுகின்றன. மாவட்டத் தலைநகரங்கள், முக்கிய நகரங்களில் மக்கள் தொகைக்கேற்ப மாநகராட்சிகள் அமைக்கப்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள இருபத்து ஐந்து மாநகராட்சிகளில், முதலாவது மிகப்பெரிய மாநகராட்சி சென்னை ஆகும். இரண்டாவது கோயம்புத்தூர் மாநகராட்சியும், மூன்றாவது திருச்சிராப்பள்ளி மாநகராட்சியும் முறையே நான்காவது மதுரை மாநகராட்சியும் அடுத்த படியாக சேலம் மாநகராட்சியும் திருப்பூர் மாநகராட்சியும் உள்ளன. இந்த ஆறு மாநகராட்சிகள் மட்டுமே தமிழகத்தின் மிக முக்கியமான மாநகராட்சிகள் ஆகும். பிற மாநகராட்சிகள், திருநெல்வேலி, ஈரோடு உட்பட சில மாநகராட்சிகள் அதற்கு அடுத்த நிலையில் காணப்படுகிறது. இந்த மாநகராட்சிகளின் தரவரிசை என்பது மக்கள் தொகை அடிப்படையிலும், மாநகராட்சி வருவாய் அடிப்படையிலும், மாநகராட்சி மண்டலங்கள் மற்றும் வார்டுகள் அடிப்படையிலும் அமைகிறது [1]

தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் மிக அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 25 மாநகராட்சிகள் இருக்கின்றன. இம்மாநகராட்சிகளுக்கு அவற்றின் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த மாநகராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த மாமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாமன்றத் தலைவராகவும், ஒருவர் மாமன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். மாநகராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர், அந்தப் பணிகளை தனக்குக் கீழுள்ள அலுவலர்களையும் ஊழியர்களையும் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Remove ads
தமிழக மாநகராட்சிகளின் ஆண்டு வரி வருவாய்
- பெருநகர சென்னை மாநகராட்சி - 2891.8 கோடி
- கோயம்புத்தூர் மாநகராட்சி - 998.11 கோடி
- திருச்சிராப்பள்ளி மாநகராட்சி - 722.86 கோடி
- மதுரை மாநகராட்சி - 432 கோடி
- தாம்பரம் மாநகராட்சி - 284.25 கோடி
- சேலம் மாநகராட்சி- 235 கோடி
- திருப்பூர் மாநகராட்சி - 234.83 கோடி
- ஈரோடு மாநகராட்சி - 194.23 கோடி
- திருநெல்வேலி மாநகராட்சி - 164.42கோடி
- ஆவடி மாநகராட்சி - 145.26 கோடி
- வேலூர் மாநகராட்சி - 130.71 கோடி
- தூத்துக்குடி மாநகராட்சி - 115 கோடி
- ஒசூர் மாநகராட்சி - 102.41 கோடி
- காஞ்சிபுரம் மாநகராட்சி - 88.96 கோடி
- கரூர் மாநகராட்சி - 82 கோடி
- தஞ்சாவூர் மாநகராட்சி - 77.96 கோடி
- புதுக்கோட்டை மாநகராட்சி - 67 கோடி
- காரைக்குடி மாநகராட்சி - 57.5 கோடி
- நாகர்கோயில் மாநகராட்சி - 57.26 கோடி
- கும்பகோணம் மாநகராட்சி - 51.36 கோடி
- திண்டுக்கல் மாநகராட்சி - 50.53 கோடி
- கடலூர் மாநகராட்சி - 45.38 கோடி
- சிவகாசி மாநகராட்சி - 41.38 கோடி
- திருவண்ணாமலை மாநகராட்சி
- நாமக்கல் மாநகராட்சி - 48.84 கோடி
இதில் முதல் மூன்று இடங்களை சென்னை, கோயம்புத்தூர், திருச்சி மாநகராட்சிகள் பெற்றுள்ளன. இதில் 2021 ஆண்டு அடிப்படையில் மிகக்குறைந்த வரி வருவாயைக் வருவாயைக் கொண்ட மாநகராட்சி சிவகாசி ஆகும். புதிய ஆறு மாநகராட்சிகளின் வரம்பு நகர எல்லைக்கு சமமாக இருக்கும். எனவே பின்னர் நகர வரம்பு விரிவாக்கம், ஆண்டு வருமானம் அதிக உயரும்.
Remove ads
மாநகராட்சிகளின் பட்டியல்
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads