நாஞ்சிங்

From Wikipedia, the free encyclopedia

நாஞ்சிங்
Remove ads

நான்கிங் அல்லது நான்ஜிங் (Nanjing) (listen; சீனம்: 南京; பின்யின்: Nánjīng; வேட்-கில்சு: Nan-ching) சீனாவின் கிழக்குப் பகுதியில் அமைந்த ஜியாங்சு மாகாணத்தின் தலைநகர் ஆகும்.[1] சீனாவின் வரலாறு மற்றும் கலாசாரத்தில் முக்கிய இடம் வகித்த நான்கிங் நகரம், சீனாவின் வரலாற்றுத் தலைநகர் என்று அறியப்படுகிறது.[2] கீழ் யாங்கிடிசு ஆற்றின் வடிநிலப் பரப்பில் அமைந்துள்ளது. ஆறு சீன அரச குலங்களின் தலைநகராக நான்கிங் விளங்கியது.[3] 1912-1949ஆம் ஆண்டு முடிய மக்கள் சீனத்தின் தலைநகராக விளங்கியது.[4] சீனாவின் 15 துணை மாகாண நகரங்களில் நான்கிங் நகரமும் ஒன்றாகும்.[5] நாங்கிங் நகரம், சீனாவின் கல்வி, ஆய்வு, போக்குவரத்து, சுற்றுலாத் துறைகளில் மையமாக உள்ளது. 2014ஆம் ஆண்டில் கோடை ஒலிம்பிக் விளையாட்டுகள் நடத்திய பெருமை, நான்கிங் நகருக்கு உண்டு.[6]

விரைவான உண்மைகள் நான்கிங் 南京市, நாடு ...
Remove ads

நான்கிங் நகரத்தின் மக்கட்தொகை 8.16 மில்லியன்.[7][8] and a urban population of 6.55 million,[9][10] சாங்காய் நகரத்திற்கு அடுத்து, நாங்கிங் நகரம், கிழக்கு சீனாவின் பெரிய வணிக மையமாக திகழ்கிறது.

Remove ads

புவியியல்

யாங்கிடிசு ஆற்றின் வடிநிலத்தில் அமைந்த நாங்கிங் 6598, சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நகரம்; சீனாவின் பெரிய பொருளாதார சிறப்பு மண்டலத்தில் அமைந்துள்ளது.

நாங்கிங் நகரம் சீனாவின் கிழக்கு மற்றும் மேற்கு வாயிலாக அமைந்துள்ளது. மேலும் சீனாவின் வடக்கு மற்றும் தெற்கு தொண்டையாக அமைந்துள்ளது.

சீனக்குடியரசின் தலைநகராக நாங்கிங்

நாங்கிங் புரட்சியின் முடிவில் சன் –யாட்- சென் தலைமையில் சீன மக்கள் குடியரசு (1912–1921) ஆட்சி சனவரி 1912இல் நிறுவப்பட்டது. அப்போது நாங்கிங் நகரம் சீன நாட்டின் புதிய தலைநகராக விளங்கியது.

1927ஆம் ஆண்டில் குவாமிங்டன் கட்சியின் தலைமைப் படைத்தலைவர் சியாங் கை சேக் (Chiang Kai-shek), சீனாவின் தலைநகரை பெய்ஜிங் நகரத்திலிருந்து மீண்டும் நாங்கிங் நகரத்திற்கு மாற்றினார். இரண்டாம் சீனா-ஜப்பான் போரில், 1931இல், ஜப்பான் மஞ்சூரியாவை கைப்பற்றிய பின், 1937இல் சீனாவின் நாங்கிங் நகரைப் கைப்பற்றி முன்று இலட்சம் சீன மக்களை இரக்கமின்றி படுகொலை செய்தது. 13 திசம்பர் 1937இல் நடந்த இந்நிகழ்வை நாங்கிங் படுகொலைகள் என்பர். இப்போருக்குப் பின் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே நாஞ்சிங் உடன்படிக்கை ஏற்பட்டது.

Remove ads

நிர்வாகம்

நாங்கிங் நகர சீன பொது உடமைக் கட்சிக் குழுவின் செயலாளர், நாங்கிங் மக்கள் அரசு என்ற அமைப்பின் ஆளுனராகவும் மேயராகவும் செயல்படுகிறார். நாங்கிங் நகரம் 11 மாவட்டங்களைக் கொண்டது

பொருளாதாரம்

மின் சாதனங்கள், கார் உற்பத்தி, பெட்ரோலிய பொருள் உற்பத்தி, இரும்பு மற்று எஃகு உற்பத்திகளுக்கு பெயர் பெற்ற நகரம்.

Thumb
நான்கிங் நகரம்,2005

அடிக்குறிப்புகள்

Loading content...

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads