நாட்டிய ராணி

1949 தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

நாட்டிய ராணி
Remove ads

நாட்டிய ராணி (Natyarani) என்பது 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நடனத் திரைப்படமாகும். பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ராஜா ஐயங்கார், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

விரைவான உண்மைகள் நாட்டிய ராணி, இயக்கம் ...
Remove ads

கதை

ஆசிரமம் ஒன்றில் நாட்டியம், இசை ஆகியவற்றை சாது வருவர் கற்றுத் தருகிறார். சாதுவுக்கு ச்சிற்றூரைச் சேர்ந்த சாந்தலா என்ற இளம் பெண் தினமும் பால் கொண்டுவந்து தருகிறாள். ஆசிரமத்தில் மாணவர்கள் நாட்டியம் பயில்வதை அவள் ஒருநாள் பார்க்கிறாள். அன்று அவளுக்கு விந்தையான கணவு வருகிறது. அதில் தான் நாட்டியம் பயின்று உயர்ந்த நிலையை அடைவதாக வருகிறது. இதை சாந்தலா தனது தோழியிடம் சொல்ல, அவள் கேலி செய்கிறாள். அதனால் சினமுற்ற அவள், தன் கனவை உண்மையாக்க சிற்றூருக்கு வெளியே உள்ள சிவன் கோயிலில் சிவனை நோக்கி தவம் இருக்கிறாள். அவளின் தவத்துக்கு மெச்சிய சிவன் அவளு முன் தோன்றி அவள் கேட்ட வரத்தை அளிக்கிறார். இந்த நேரம் போசள மன்னன் விட்டுணுவர்தனன், சாதுவைச் சந்திக்க வருகிறான். சாது நாட்டியம் குறித்து குறிப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு பாடலைப் பாடுகையில், பால் கொண்டு வந்த சாந்தலா, ஆட ஆரம்பிக்கிறாள். அவள் நாட்டிய முத்திரைகளைச் சரியாகப் பயன்படுத்துவதி ஆடுவதைக் கண்டு இருவரும் வியக்கிறனர். மன்னன் விட்டுணுவர்தனன், சாந்தலாவின் நாட்டியத்திலும், அழகிலும் மயங்கி அவளை காந்தர்வ மணம் புரிகிறான். தக்க சமயத்தில் அரண்மனைக்கு அழைத்துச் செல்வதாக வாக்குக் கொடுக்கிறான். ஆனால், அவன் வந்து அழைத்துச் செல்லாததால் அரண்மனைக்கு சாந்தலா செல்கிறாள். விட்டுணுவர்தனனுக்கு ஏற்கெனவே மனைவி இருப்பதை அறிகிறாள். சாந்தலா குறித்துத் தெரியவரும் ராணி, அவளைக் நஞ்சிட்டுக் கொல்ல முயற்சிக்கிறாள். அதிலிருந்து எப்படித் தப்பித்து விட்டுணுவர்தனனுடன் ஒன்று சேர்கிறாள் என்பதே மீதிக் கதையாகும்.[2]

Remove ads

நடிப்பு

தயாரிப்பு

படத்தை பாஸ்கர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.[3] படத்தை பி. என். ராவ் இயக்கினார், கதை, உரையாடல் போன்றவற்றை கம்பதாசன் எழுதினார். வி. மாதவன் நடன அமைப்பை மேற்கொண்டார். இந்த படத் தயாரிப்பில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ஒரே கதாபாத்திரத்தை இரண்டு வெவ்வேறு நடிகைகள் செய்தனர். படத்தின் தயாரிப்பு தொடங்கியபோது, வசுந்தரா தேவி சாந்தலாவாக நடித்தார். அவரை வைத்து பல காட்சிகளும் நடனங்களும் படமாக்கப்பட்டன. ஆனால் சில காரணங்களால் படத்திலிருந்து பாதியிலேயே அவர் விலகினார். பிறகு அவர் நடிக்கவேண்டிய மீதி காட்சிகளில் பி. எஸ். சரோஜா நடித்தார். வசுந்தரா தேவியை வைத்து எடுக்கப்பட்ட காட்சிகளைக் இயக்குநருக்கு மனமில்லை. இதனால் முந்தைய காட்சிகளை மாற்றாமல் நபரை மட்டும் மாற்றுவதற்கு அவருக்கும் திரைக்கதை ஆசிரியர் ஒரு அற்புதமான யோசனை அளித்தார். அதன்படி வசுந்தரா தேவி நடித்த சாந்தலா கதாபாத்திரம் தீ விபத்தில் இறந்துபோய், ஆவியாக மற்றொரு பெண்ணின் உடலில் நுழைந்துவிடுகிறது. அந்தப் பெண் இப்போது சாந்தலா பாத்திரத்தில் தொடர்ந்தது இருந்தார். இதற்காக கதையில் சிலமாற்றங்கள் செய்து, கதை மீண்டும் எழுதப்பட்டது. அந்தக் காலத்தில் மக்கள் ஏற்றுக்கொண்ட ஒரு நம்பத்தகுந்த விளக்கமாக இது கருதப்படுகிறது.[2]

பாடல்கள்

பாடல் வரிகளை எழுதி பாபநாசம் சிவன் இசையமைத்தார். சில பாடல் வரிகளை எஸ். ராஜாராம் எழுதினார். பின்னணி பாடல்களை டி. கே. பட்டம்மாள், கொத்தமங்கலம் சீனு ஆகியோர் பாடினர். சிறு வேடத்தில் நடித்த கே. தவமணி தேவி ஒரு பாடலைப் பாடினார்.[2]

மேற்கோள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads