டி. எஸ். பாலையா

தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

டி. எஸ். பாலையா
Remove ads

திருநெல்வேலி சுப்ரமணியன் பிள்ளை. பாலையா என்பதன் சுருக்கமே டி. எஸ். பாலையா(T. S. Balaiah) (ஆகத்து 23, 1912[1] - சூலை 22, 1972), தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். திருநெல்வேலியைச் சேர்ந்தவர்.[2] கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன.[3]

விரைவான உண்மைகள் டி. எஸ். பாலையா, பிறப்பு ...
Remove ads

இளமை வாழ்க்கை

தந்தை பெயர் சுப்பிரமணிய பிள்ளை. பாலையா இளம் வயதிலேயே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பல நாடக கம்பெனிகளில் சேர்ந்து, பல்வேறு வேடங்களில் நடித்து, சிறந்த நடிகராக உருவானார். பதி பக்தி என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, இவர் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. கோவையைச் சேர்ந்த ஏ. என். மருதாசலம் செட்டியார், தன் மூன்று நண்பர்களுடன் சேர்ந்து ‘மனோரமா பிலிம்ஸ்’ என்ற படக்கம்பெனியை தொடங்கினார். ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ். எஸ். வாசன் எழுதிய சதிலீலாவதி என்ற கதையை படமாக்க தீர்மானித்தார். இந்த கதைக்கும், ‘பதிபக்தி’ நாடகக்கதைக்கும் நிறைய ஒற்றுமை இருந்தது. நாடகத்தில் எந்த மாதிரியான வேடத்தில் பாலையா நடித்தாரோ, அதே மாதிரியான வேடத்தில் இவரை 1936 இல் வெளியான சதிலீலாவதியில் நடிக்க வைத்தார் மருதாசலம் செட்டியார். எல்லிஸ் ஆர். டங்கன் இந்தப்படத்தை இயக்கினார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில் முத்திரை பதித்தார். பிற்காலங்களில் நகைச்சுவை வேடங்களிலும் புகழ் பெற்றார்.

Remove ads

திரை வாழ்க்கை

‘‘சதிலீலாவதி’’க்கு பிறகு பாலையா நடித்த படம் இரு சகோதரர்கள். இந்தப்படத்தையும் எல்லிஸ் ஆர். டங்கனே இயக்கினார். இந்தப்படத்திலும் பாலையாவின் நடிப்பு பாராட்டப்பட்டது. 1937–ம் ஆண்டில் சதி அனுசுயா என்ற படத்தில் நடித்தார். 1937 இல் எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த அம்பிகாபதியில் வில்லனாக நடித்திருந்தார், பம்பாய் மெயில், உத்தமபுத்திரன் (பி. யூ. சின்னப்பா), பூலோக ரம்பை ஆர்யமாலா, பிருதிவிராஜன், மனோன்மணி, ஜகதலப்பிரதாபன், சாலி வாகனன், பர்மா ராணி, மீரா முதலிய படங்களில் நடித்தார்.

1946–ம் ஆண்டு, பாலையாவின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க வருடமாகும். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘‘சித்ரா’’ படத்தில் பாலையா கதாநாயகனாக நடித்தார். கதாநாயகியாக நடித்தவர் கே. எல். வி. வசந்தா. இந்தப்படத்திற்கு பிறகு பாலையா நடித்த படம் ‘வால்மீகி’. ஹொன்னப்ப பாகவதரும், டி.ஆர்.ராஜகுமாரியும் இணைந்து நடித்த இப்படத்தில், பாலையா வில்லனாக நடித்தார். பிறகு, 1947–ம் ஆண்டு பாலையா மீண்டும் கதாநாயகனாக நடித்த படம் சண்பகவல்லி. இதில் கதாநாயகியாக நடித்தவர் எம். எஸ். விஜயாள். எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படமான ராஜகுமாரியில் வில்லனாக நடித்தார் பாலையா. இருவரும் போடும் கத்திச்சண்டை படத்தின் சிறப்பு அம்சமாக விளங்கியது.

ஜூபிடர் தயாரிப்பான மோகினி என்ற படத்தில் இரண்டு கதாநாயகர்கள். ஒருவர் எம்.ஜி.ஆர். மற்றொருவர் பாலையா. பாலையாவின் ஜோடி மாதுரி தேவி. பிறகு மாரியம்மன், நாட்டிய ராணி, விஜயகுமாரி, ஏழை படும் பாடு, சந்திரிகா முதலிய படங்களில் நடித்தார். 1950–ம் ஆண்டு பட்சிராஜா ஸ்டுடியோஸ் ‘‘பிரசன்னா’’ என்ற மலையாள படத்தை தயாரித்தனர். அதில், லலிதா கதாநாயகியாகவும் பத்மினி இரண்டாவது கதாநாயகியாகவும் நடித்தனர். லலிதாவுக்கு நாயகனாக டி. எஸ். பாலையா நடித்தார்.

Remove ads

சொந்தக்குரலில் பாட்டு

பாலையாவுக்கு நல்ல குரல் வளம் உண்டு. ஆரம்பகாலத்தில், பல படங்களில் சொந்தக்குரலில் பாடியுள்ளார். ‘‘பிரசன்னா’’ விலும் ஒரு மலையாளப்பாடலை சொந்தக் குரலில் பாடினார்.

நடித்த திரைப்படங்களின் பட்டியல் (முழுமையானதன்று)

1937 - 1940

  1. அம்பிகாபதி (1937)
  2. பம்பாய் மெயில் (1939)
  3. உத்தம புத்திரன் (1940)‎
  4. பூலோக ரம்பை ‎(1940)

1941 - 1950

  1. ஆர்யமாலா (1941)
  2. மனோன்மணி (1942)
  3. பிருத்விராஜன் ‎(1942) ‎ ‎
  4. ஜகதலப் பிரதாபன் (1944)
  5. மீரா (1945)
  6. ரிடர்னிங் சோல்ஜர்‎ (1945)
  7. வால்மீகி (1946)
  8. ராஜகுமாரி (1947)
  9. கடகம் (1947)
  10. மாரியம்மன் (1948) ‎
  11. மோகினி (1948) ‎
  12. பிழைக்கும் வழி (1948) ‎ ‎
  13. சண்பகவல்லி (1948)
  14. பிழைக்கும் வழி ‎(1948)
  15. வேலைக்காரி ‎(1949)
  16. நாட்டிய ராணி (1949) ‎
  17. ஏழை படும் பாடு (1950) ‎ ‎
  18. விஜயகுமாரி (1950) ‎
  19. சந்திரிகா (1950)‎

1951 - 1960

  1. ஓர் இரவு (1951)
  2. மணமகள் (1951)
  3. வனசுந்தரி (1951) ‎
  4. அந்தமான் கைதி (1951)
  5. சுதர்ஸன் (1951)
  6. வேலைக்காரன் ‎(1952)‎
  7. பொன்னி ‎(1953)‎
  8. ஆசை மகன் ‎(1953)
  9. அன்பு ‎(1953)
  10. ரத்த பாசம் ‎(1954)
  11. தூக்குத் தூக்கி (1954)
  12. நண்பன் ‎(1954)‎
  13. செல்லப்பிள்ளை (1955)
  14. மாமன் மகள் (1955) ‎
  15. காலம் மாறிப்போச்சு (1956)
  16. ரம்பையின் காதல் (1956)‎
  17. புதையல் (1957)
  18. அலாவுதீனும் அற்புத விளக்கும் (1957)
  19. புதுமைப்பித்தன் (1957)
  20. புது வாழ்வு (1957)
  21. அன்பு எங்கே (1957)
  22. பதி பக்தி (1958)‎
  23. புதுமைப்பெண் (1959)‎
  24. மரகதம் (1959)
  25. பார்த்திபன் கனவு (1960)
  26. எங்கள் செல்வி (1960)
  27. களத்தூர் கண்ணம்மா (1960)
  28. கவலை இல்லாத மனிதன் (1960)
  29. சவுக்கடி சந்திரகாந்தா (1960) ‎
  30. பாக்தாத் திருடன் (1960)
  31. மகாலட்சுமி (1960)

1961 - 1970

  1. பாவ மன்னிப்பு (1961)
  2. பாலும் பழமும் (1961)
  3. எல்லாம் உனக்காக (1961)
  4. வளர் பிறை (1962)
  5. அறிவாளி (1963)
  6. காதலிக்க நேரமில்லை ‎(1964)
  7. கறுப்புப் பணம் (1964) ‎
  8. பணம் படைத்தவன் (1965) ‎
  9. பழநி (1965)
  10. இதயக்கமலம் ‎‎(1965)
  11. திருவிளையாடல் (1965)
  12. பாமா விஜயம் (1967)
  13. ஊட்டி வரை உறவு (1967)
  14. தில்லானா மோகனாம்பாள் (1968)
  15. குருதட்சணை (1969)
  16. ஓடும் நதி (1969)
  17. எதிரொலி (1970)
  18. எதிர்காலம் (1970)
  19. தங்கைக்காக (1971)
  20. ராணி யார் குழந்தை (1972)
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads