நாதியா முராது

From Wikipedia, the free encyclopedia

நாதியா முராது
Remove ads

நாதியா முராது (Nadia Murad) வடக்கு ஈராக்கில் 1993 ஆம் ஆண்டு பிறந்தார். இசுலாமிய அரசால் யசீதி இன மக்கள் படும் கொடுமைகள் குறித்து வெளியுலகிற்கு தெளிவுபடுத்தி அம்மக்களுக்கான மனித உரிமை ஆர்வலராகத்[1][2] திகழ்கிறார். மேலும் இவர் ஐக்கிய நாடுகள் அவையால் பாலியல் அடிமைகளுக்கான நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டதுடன், அமைதிக்கான நோபல் பரிசுக்காக [3] 2016 ஆண்டிற்கான முக்கிய நபராகப் பரிந்துரைக்கப்பட்டார். 2018 இல் இவருக்கும் டெனிசு முக்வேகிக்கும் "பாலியல் வன்முறைகளை போர் மற்றும் ஆயுத மோதலின் ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு எதிரான அவர்களின் முயற்சிகளுக்காக" அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[4]

விரைவான உண்மைகள் நாதியா முராதுNadia Murad, பிறப்பு ...
Remove ads

சிறைப்பட்ட நிலை

2014 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள கோச்சோ கிராமத்தில் புகுந்த இசுலாமிய அரசு தீவிரவாதிகள் இவரின் இனத்தவர்கள் 600 பேரைக் கொன்றுவிட்டு இவரோடு பல இளம் பெண்களைப் பாலியல் அடிமைகளாகப் பிடித்துச் சென்றனர்.[5] அங்கு இவரோடு சேர்த்து 6,700 யாசிதி இன பெண்கள் சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டனர். இவர்களிடமிருந்து 2014 ஆம் ஆண்டு தப்பித்து மோசுல் நகருக்கு வந்து சேர்ந்தார்.[6] அங்கிருந்து கத்தாரின் தலைநகர் தோகா வழியாக ஜெர்மனி நாட்டின் இசுடுட்கார்ட் என்ற நகருக்கு சென்று தஞ்சம் அடைந்தார்.

Remove ads

தொழில்

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒரு மாநிலமான டெக்சஸ்சில் அமைந்துள்ள யாதிகளுக்கான உலகளவிலான அமைப்பு அனைத்து உதவிகளையும் செய்கிறது.[5][7]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads