நாமத்தலை வாத்து
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாமத்தலை வாத்து [2] எனப்படும் மகுடித் தாரா[3] (Eurasian wigeon - Anas penelope) தமிழ்நாட்டிற்கு வலசை வரக்கூடிய ஆனசு என்ற பேரின வகையைச் சேர்ந்த ஒரு நீர்ப்பரப்பில் மேயும் டாப்ளிங் வாத்து ஆகும்.
Remove ads
கள இயல்புகள்
- ஆண் (இனப்பெருக்க காலத்தில்) : சாம்பல் நிறம் உடையது; தலை மற்றும் கழுத்து செம்பழுப்பு நிறத்தில் இருக்கும்.
- முன் நெற்றியில் உள்ள இளமஞ்சள் நிறத் திட்டு இதன் பெயருக்கு காரணமாக அமைகின்றது.
பரவல் மற்றும் வாழ்விடம்
பொதுவாக ஐரோப்பிய, ஆசியப் பகுதிகளுக்கு (வட இந்தியா உள்ளிட்ட பகுதிகளுக்கு) மகுடித் தாராக்கள் பெருமளவில் வலசை வருகின்றன; கிழக்கு மற்றும் தென் இந்தியப் பகுதிகளில் இவற்றை அதிகம் காண இயலாது. ஏரிகள், குளங்கள் மற்றும் சதுப்பு நிலங்களில் அதிகம் காணப்படும் -- இருப்பினும் சில சமயங்களில் அலையாத்தி காடுகளிலும் உவர் நீர் நிலங்களிலும் இவற்றைக் காணலாம்.[4]
இனப்பெருக்கம்
இவை ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே (அதாவது, ஐசுலாந்து, ஸ்காட்லாந்து முதல் காம்சட்கா வரை உள்ள பகுதிகள்) இனப்பெருக்கம் செய்கின்றன.[4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads