நாயக் (திரைப்படம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாயக் (Naayak (ஆங்கிலம்: Leader) என்பது 2013 ஆண்டைய இந்திய தெலுங்கு மசாலாப்படம் ஆகும். இதை அகுலா சிவா எழுத வி. வி. விநாயக் இயக்கியுள்ளார். படத்தை யுனிவர்சல் மீடியா என்ற பதாகையின் கீழ் டி. வி. வி. தன்னய்யா மற்றும் எஸ். எஸ். ராதாகிருஷ்ணா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் ராம் சரண், காஜல் அகர்வால் , அமலா பால் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். எஸ். தமன் படத்துக்கான பின்னணி இசையமைப்பைச் செய்துள்ளார். சோட்டா கே. நாயுடு படத்தின் ஒளிப்பதிவையும், கௌதம் ராஜு படத்தொகுப்பையும் மேற்கோண்டுள்ளனர்.

விரைவான உண்மைகள் நாயக், இயக்கம் ...

இந்தப் படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்: ஐதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் செர்ரி என்ற வேடம் மற்றும் கொல்கத்தாவில் ராவத் என்ற தீய அரசியல்வாதிக்கு எதிராக போராடுபவரான சித்தார்த் நாயக் ஆகிய இரு வேடங்களில் நடித்துள்ளார்.

படத்தயாரிப்பானது 2011 நவம்பர் 9 அன்று துவங்கி, முதன்மைப் படப்பிடிப்பானது 2012 பெப்ரவரி 7 அன்று துவங்கியது. படப்பிடிப்பானது பெரும்பாலும் ஐதராபாத் மற்றும் கொல்கத்தாவில் நடந்தது. மேலும் துபாய், ஐசுலாந்து, இந்தோனேசியா,சுலோவீனியா ஆகிய இடங்களில் ஒரு சில பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டன. படப்பிடிப்பு 2012 திசம்பர் 29 அன்று முடிவுற்றது.

படமானது மகர சங்கராந்தியை முன்னிட்டு 2013 சனவரி 9 அன்று உலகளவில் 1600 திரையரங்குகளில் வெளியானது. இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து பொதுவாக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று, வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்தப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இதே பெயரில் மொழிமாற்றும் செய்யப்பட்டது. இந்தப்படம் இந்தியில் டபுள் அட்டாக் என்ற பெயரில் கோல்ட்மெய்ன்ஸ் டெலிஃபிலிம்ஸ் மூலம் அதே ஆண்டில் மொழிமாற்றும் செய்யப்பட்டது. இந்த படம் வங்க மொழியில் (வங்கதேசம்) ஹீரோ: தி சூப்பர்ஸ்டார் என்ற பெயரில் 2014 ஆண்டு மறு ஆக்கம் செய்யப்பட்டது.

Remove ads

நடிகர்கள்

  • ராம் சரண் - சரண் (செரிரி)[3]/சித்தார்த் நாயக்.
  • காஜல் அகர்வால் - மது.[4]
  • அமலா பால் - நந்தினி.
  • பிரதீப் ரவட் - ரவத்.
  • எம். என். எம். அனஸ் நவாஸ்-திரு.அனஸ்.
  • பிரம்மானந்தம் - ஜலேபி.
  • புனிதசீலன் பிரதீபன் - திரு. புனிதசீலன்.
  • ராகுல் தேவ் - பாப்ஜி.
  • ஜயபிரகாஷ் ரெட்டி - பாப்ஜியின் மாமா.
  • ஆஷிஷ் வித்யார்த்தி - ராவதின் சகோதரரான டாக்கி சேத் கொலை வழக்கில் குற்றவாளி கண்டுபிடிக்க நியமிக்கப்பட்ட சிபிஐ அதிகாரி.
  • ஆனந்திரா பிலேந்திரா-திருமதி பிலேந்திரா.
  • கிருஷ்ண முரளி - சுக்லா பாய்.
  • யோகா தினேஷ் - திரு. தினேஷ்.
  • தேவ் கில் - பேட்வெல், ராவத்தின் தம்பி.
  • சைஜு குருப் - மெலனேசியன் டேஷன்
  • சுரேகா வாணி - சித்தார்த்தின் சகோதரி.
  • ராஜீவ் கனகாலா - சித்தார்த்தின் மைத்துனர்.
  • ஜானகி பாலசுப்பிரமணியம்-திருமதி பாலசுப்பிரமணியம்.
  • ம. சூ. நாராயணா - குடிகார சிபிஐ அதிகாரி.
  • ஜாக்கி செராப்
  • விஜய் யேசுதாஸ்
  • ரகு பாபா - பாப்ஜியின் அடியாள்.
  • ஆனந்தி - ரகு பாபுவின் சகோதரி
  • அஜஸ் கான் _ டாக்சி சேத், ராவத்தின் முதல் சகோதரர்.
  • வினீத் குமார் - தாசு, ஐதராபாதிதின் மாபியா மலைவர்.
  • வேணு மாதவ் - வேணு.
  • தனிகில்லா பரணி - நீதிபதி.
  • சத்யம் ராஜேஷ் - தாசுவின் அடியாள்.
  • சுதா - செர்ரியின் தாயார்.
  • சார்மி கவுர் - ஐட்டம் நம்பர் நெல்லூரே பாடலில் சிறப்புத் தோற்றம்.
Remove ads

கதை

ஐதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் செர்ரி (ராம் சரண்) மற்றும் கொல்கத்தாவில் ராவத் என்ற தாதாவும் ஒரே தோற்றம் கொண்டவர்களாக உள்ளனர்.

சித்தார்த் நாயக் தன் மேற்படிப்புக்காக கொல்கத்தாவில் தன் அக்காளின் வீட்டில் இருந்து படித்து வருகின்றார். இந்நிலையில் ஒரு அரசியில்வாதியின் சகோதரரான ராவத் என்பவர் ஊரையே மிரட்டி அடக்கி ஆள்கிறான். எதிர்ப்பவர்களை எல்லாம் குத்திக் கொலை செய்கிறான். ஆரம்பத்தில் இந்த அநியாயங்களை தட்டிக் கேட்க நினைக்கும் தன் அக்காவின் கணவரை சித்தார்த் நாயக் தடுத்து நிறுத்துகிறார். ஒரு கட்டத்தில் சித்தார்த்தின் மாமாவையே அக்கொடியவன் குத்திக் கொன்றுவிடுகிறான். அதன் பிறகு தன் அக்காவின் கணவரைக் கொன்றவனை அழித்து சிதாதார்த் நாயக் தாதா ஆகிறார். அவருக்கு அடிபணியும் சண்டியர்களின் சொத்துக்களை எழுதி வாங்கி பொதுமக்களுக்கு வழங்குகிறார். படத்தின் பிற்பகுதியில், இவரது உருவத் தோற்றுமையால் செர்ரிக்கு பல குழப்பங்கள் உருவாகின்றன. ஒரு கட்டத்தில் செர்ரியும், சித்தார்த் நாயக்கும் சந்திக்கின்றனர். செர்ரியிடம் சித்தார்த் நாயக் தன் கதையைக் கூறுகிறார். இதையடுத்து செர்ரி அவருக்கு உதவ முன்வருகிறார். இருவரும் தங்கள் உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி தீயவர்களை அழித்து, தங்கள் மீதுள்ள வழக்குகளிலில் இருந்தும் தப்பிக்கின்றனர் அது எப்படி என்பதே கதையின் முடிவு.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads