காஜல் அகர்வால்

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

காஜல் அகர்வால்
Remove ads

காஜல் அகர்வால் (Kajal Aggarwal, பிறப்பு: 19 சூன், 1985) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். பின்னர், 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு 2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.[2] இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த தாலிங்கு (2010), பிருந்தாவனம் (2010), மிட்டர். பெருபெட்டு (2011), பிசினசு மேன் (2012), சில்லா போன்ற திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார்.[3]

விரைவான உண்மைகள் காஜல் அகர்வால், பிறப்பு ...
Remove ads

இளமைக் கால வாழ்க்கை

மும்பையில் சுமன் அகர்வால், வினய் அகர்வால் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இவருடைய தங்கை நிஷா அகர்வால், தெலுங்கு, தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் தன்னுடைய கல்வியை மும்பையிலேயே முடித்த பிறகு, விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

திரை வாழ்க்கை

ஆரம்ப காலம்

இவர் ஆரம்பகாலத்தில் நடித்த கியூன்...! ஹோ கயா நா, ஐஷ்வர்யா ராயின் தோழியாக நடித்த அப்பாத்திரம் பெரியதாக பேசப்படவில்லை.[4][5] பின்னர் 2007-ம் ஆண்டு லக்‌ஷ்மி கல்யாணம் திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு திரைத்துறையில் முக்கிய கதாமாந்திராக அறிமுகமானார். இதுவும் வெற்றிபெற தவறியது. ஆண்டின் இறுதியில் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் ச்சந்தமாமா திரைப்படத்தில் நடித்தார். இது அவருடைய வளர்ச்சிக்கு பெரிதும் உதவிபுரிந்தது.[6]

அதன்பிறகு 2008-ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் பரத்துடன் இவர் நடித்த பழனி திரைப்படம் தமிழில் வெளியானது. பின்னர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிறு வேடத்தில் சரோஜா திரைப்படத்திலும் பிறகு பாரதிராஜாவின், பொம்மலாட்டம் திரைப்படத்தில் நடித்தார். ஆயினும் மிகவும் தாமதமாக வெளியான இத்திரைப்படமும் எடுபடவில்லை.[7][8]

புகழின் உச்சத்தில் (2009 – தற்போது வரையிலும்)

2009-ம் ஆண்டு இவர் நான்கு திரைப்படத்தில் நடித்தார். அதுவரையில் இவர் நடித்த சரியாக ஓடாத நிலையில், எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் இளவரசியாக இவர் நடித்த மஹதீரா மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. இவருக்கும் பாராட்டுகள் குவிந்தன.[9][10][11][12][13][14][15], இவருக்கு அத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த டார்லிங்க் (2010), பிருந்தாவனம் (2010), மிஸ்டர். பெர்பெக்ட் (2011), பிஸ்னஸ் மேன் (2012) என அனைத்துத் திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார்.

தற்போது, சூர்யாவுடன், மாற்றான் திரைப்படத்திலும்[16][17] ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யுடன் துப்பாக்கி திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.[18][19] தெலுங்கில், மகேஷ் பாபுவுடன் இணைந்து சுகுமாரின் பெயரிடப்படாத திரைப்படமொன்றிலும் நடித்து வருகிறார்.[20]

Remove ads

திரைப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads