நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
வெளிவரவிருக்கும் தமிழ் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் (Naai Sekar Returns) என்பது 2022-இல் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிப்பில் இயக்குநர் சுராஜ் எழுதி இயக்கிய இந்தியத் தமிழ் மொழி குற்றவியல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தில் வடிவேலு 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்கிறார்.[4][5] வடிவேலு மற்றும் சுராஜ் ஆகியோருடன் தனது முதல் கூட்டணியில் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் சுராஜ் இயக்கிய தலை நகரம் (2006) திரைப்படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரத்தின் வழித்தொடர் ஆகும்.[6] இந்த திரைப்படம் 9 டிசம்பர் 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
Remove ads
நடிகர்கள்
- நாய் சேகராக வடிவேலு
- சிவாங்கி கிருஷ்ணகுமார்[7]
- ரெடின் கிங்ஸ்லி
- ஆனந்தராஜ்
- லொள்ளு சபா மாறன்[8]
- முனிஷ்காந்த்
- விக்னேஷ்காந்த்
- லொள்ளு சபா சேசு
- பிரசாந்த் ரங்கசாமி
தயாரிப்பு
திரைப்படங்களில் நடிப்பதற்கு நடிகர் வடிவேலுவுக்கு வழங்கப்பட்ட தடை நீக்கப்பட்டதும், இயக்குநர் சுராஜுடன் தான் நடிக்கவுள்ளதாக நடிகர் வடிவேலு அறிவித்தார். இப்படத்தை லைக்கா தயாரிப்பகம் பதாகையின் கீழ் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘நாய் சேகர்’ என்று பெயரிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தலைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. "தலை நகரம்" படத்திற்காக வடிவேலுவும், இயக்குநர் சுராஜும் முதன்முதலில் இணைந்தனர். அந்த படத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரமான 'நாய் சேகர்' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.[9] எனவே அந்த கதாபாத்திரத்தின் பெயரையே படத்தின் தலைப்பாக வைக்க படக்குழு திட்டமிட்டது. ஆனால் தலைப்பை சதீஸ் நடிப்பில் உருவாகும் படத்துக்கு ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பதிவு செய்துள்ளது.[10]
பல விவாதங்களுக்குப் பிறகு, ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தங்கள் படத்தை நாய் சேகர் என்ற பெயரில் வெளியிட்டது. எனவே தயாரிப்பாளர்கள் தலைப்பில் மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. மேலும் புதிய தலைப்பாக 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' இறுதி செய்யப்பட்டது.
சமீபத்தில் ஒரு பேட்டியில், நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி தான் படத்தில் இருப்பதை உறுதிப்படுத்தினார்.[5]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads