முனீஷ்காந்த் ராமதாஸ்
தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முனீஷ்காந்த் ராமதாஸ் (Munishkanth) ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்படத்துறையில் பணியாற்றிவருகிறார். முண்டாசுப்பட்டி, 10 எண்றதுக்குள்ள மற்றும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
Remove ads
தொழில்
இவர் 2002 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார். தமிழ் திரைப்படத்துறையில் நடிகராகவேண்டும் என்ற கனவோடு வந்தார். ஆனால் சிறு சிறு வேடங்களே கிடைத்தது. பின் இரண்டாண்டுகள் தங்கத்தட்டான் வேலைக்கு மலேசியா நாட்டிற்கு சென்றார், சென்னை திரும்பியதும் குறும்படம் நடிப்பதில் கவனம் செலுத்தினார். வடபழனி முருகன் கோவிலில் பல நாட்கள் தனது வாழ்நாளைக்கழித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் நடைபெற்ற நாளைய இயக்குநர் என்ற குறும்படம் திரையிடும் நிகழ்ச்சில் பங்குபெற்றார்.[2] தனது நண்பரான காளி வெங்கட் மூலம் ராமின் வெற்றிப்படைப்பான முண்டாசுப்பட்டி குறும்படத்தின் முனீஷ்காந்த் கதாபாத்திரத்திற்கு பின்னணிக்குரல் கொடுத்தார்.
மேலும் அவர் தமிழ் திரைப்படத்துறையில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கலானார். இயக்குநர் மணிரத்தினம் இயக்கிய கடல் (2013), சி. வி. குமார் அவர்களின் சூது கவ்வும் (2013), மற்றும் பீட்சா II: வில்லா (2013) முதலிய படங்களில் நடித்தார். 2014 ஆம் ஆண்டு தனது நண்பரான காளி வெங்கட் மூலம் ராமின் வெற்றிப்படைப்பான முண்டாசுப்பட்டி குறும்படத்தின் முனீஷ்காந்த் கதாபாத்திரத்திற்கு பின்னணிக்குரல் கொடுத்தார். இதன் பிறகே இவர் முனீஷ்காந்த் ராமதாஸ் என அழைக்கப்பட்டார்.[3][4][5]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads