நாளை நமதே
கே. எஸ். சேதுமாதவன் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாளை நமதே (Naalai Namadhe) என்பது 1975 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். சேதுமாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
Remove ads
கதை
சகோதரர்களான சங்கர், விஜய் குமார், ராதன் ஆகியோர் இளம் வயதில் பிரிந்து விடுகின்றனர். தாங்கள் பெரியவர்களாக ஆனபிறகு தங்கள் குடும்ப பாடல் மூலம் ஒன்று சேர்கின்றனர். பின்னர் தங்கள் பெற்றோரைக் கொன்ற கொலையாளியான இரஞ்சித்தை பழிவாங்குகின்றனர்.
நடிகர்கள்
- சங்கராகவும், விஜயாகவும் எம். ஜி. இராமச்சந்திரன்
- விஜயின் காதலி இராணியாக இலதா
- இராஜனாக சந்திரமோகன்
- லீலாவாக வெண்ணிற ஆடை நிர்மலா
- இரஞ்சித்தாக எம். என். நம்பியார்
- ரங்கோ என்ற ரதவண்டுவாக நாகேஷ்
- இராணியின் தந்தை தேவதாசாக எம். ஜி. சக்ரபாணி (விருந்தினர் தோற்றம்)
- 3 மகன்களின் தந்தை இரவியாக எம். ஜி. சோமன் (விருந்தினர் தோறறம்)
- 3 மகன்களின் தாய் கமலாவாக ராஜஸ்ரீ (விருந்தினர் தோற்றம்)
- விஜயின் வளர்ப்புத் தந்தையான மேலாளர் சர்மாவாக வி. எஸ். ராகவன்
- ராஜூவாக எஸ். வி. இராமதாஸ்
- கே கண்ணன் - மதன், மார்டின்
- லீலாவின் தந்தை இராபர்ட்டாக வி. கோபாலகிருஷ்ணன்
- குடிப்பகத்து தொழிலாளியாக கரிகோல் ராஜு
- போலி மருத்துவராக பீலி சிவம்
- மார்வாடியாக டி. கே. எஸ். நடராஜன்
- இளம் விஜயாக பப்லு பிரித்திவிராஜ்
Remove ads
தயாரிப்பு
நாளை நமதே என்பது இந்தித் திரைப்படமான யாதோன் கி பாரத்தின் (1973) திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும். முதலில் தர்மேந்திரா, விஜய் அரோரா ஆகியோரால் சித்தரிக்கப்பட்ட பாத்திரங்களை எம். ஜி. இராமச்சந்திரன், இரட்டை வேடத்தில் மீண்டும் நடித்தார். இராமச்சந்திரனும் கே எஸ் சேதுமாதவனும் படத்திற்கு என்ன தலைப்பு வைப்பது என்று விவாதித்துக் கொண்டிருந்தபோது, அவர்களுடைய ஒரு பத்திரிக்கையாளர் நண்பர் நாளை நமதே என்று பரிந்துரைத்தார். அந்த தலைப்பே இறுதி செய்யப்பட்டது.
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads