நா. நாச்சிமுத்து

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நா. நாச்சிமுத்து (N. Nachimuthu ) (2 சூலை 1926 - 21 மே 2016) ஒரு தமிழ்நாட்டு அரசியலர், வேளாண் ஆர்வலர் மற்றும் கல்வியாளர் ஆவார். திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த இவர், ஒட்டன்சத்திரம் தொகுதிக்கான தமிழ்நாட்டு சட்டப் பேரவை உறுப்பினராக 1967 முதல் 1976 வரை பணியாற்றினார்.

விரைவான உண்மைகள் நா. நாச்சிமுத்து, சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் ...
Remove ads

தொடக்க வாழ்க்கை

இன்றைய திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தில் உள்ள தேவத்தூரில் 2 சூலை 1926 அன்று பழனியம்மாள்-நாச்சிமுத்து இணையருக்கு மகனாகப் பிறந்தார் நாச்சிமுத்து.

கல்வி

பள்ளிக் கல்வியினை பழநி நகராட்சி உயர்நிலைப் பள்ளியிலும், மதுரை அமெரிக்கன் கல்லூரி பள்ளியிலும் பயின்றார்

அரசியல்

இவர் 1967 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வென்றார்.[2]

சட்டமன்ற உறுப்பினராக

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்ற தொகுதி ...

மறைவு

முதுமை காரணமாக அரசியலை விட்டு ஒதுங்கித் தன் வளர்ப்பு மகன் வள்ளுவன் வீட்டில் வாழ்ந்துவந்த நாச்சிமுத்து, 21 மே 2016 அன்று காலமானார்.[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads