நிகோபார் மாவட்டம்

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

நிகோபார் மாவட்டம்
Remove ads

நிகோபார் மாவட்டம், இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மூன்று மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கார் நிகோபார் நகரத்தில் உள்ளது. இதன் பரப்பளவு 1841 சதுர கி.மீ[1] . இந்த மாவட்டத்தை துணை ஆணையர் ஆள்வார். இந்திய அளவில், மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டங்களில் இதுவும் ஒன்று[2]

Thumb
நிகோபார் மாவட்டம்

அந்தமான் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஆகஸ்டு 1, 1974 அன்று உருவாக்கப்பட்டது.[3]. இங்கு முப்பத்து ஆறாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்[2]. இவர்களின் கல்வியறிவு தேசிய சராசரியை விட அதிகம். இங்கு வாழும் மக்கள் பழங்குடியினர் ஆவார்.

Remove ads

பிரிவுகள்

இது மூன்று கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஏழு மாவட்டங்களை உள்ளடக்கியது.

  • கார் நிகோபார் கோட்டம்
    • கார் நிகோபார் வட்டம்
  • நன்கௌரி கோட்டம்
    • நன்கௌரி வட்டம்
  • கமோர்தா வட்டம்
    • தெரசா வட்டம்
    • கட்சல் வட்டம்
  • பெரிய நிகோபார் கோட்டம்
    • பெரிய நிகோபார் வட்டம்
    • சிறிய நிகோபார் வட்டம்

சுற்றுலா

டகாங்

Thumb
நிகோபார் மாவட்டம்

டகாங் என்கிற விலங்கு ஒரு கடல் பாலூட்டியாகும். இது கடலில் மட்டும் வாழக்கூடிய விலங்காகும். இதனைக் கடல் பசு (Sea cow), கடல் பன்றி, கடல் ஒட்டகம், கடல் கன்னி எனவும் அழைக்கின்றனர். இது பசுவைப் போன்ற தோற்றமும், பயந்த சுபாவமும் கொண்ட விலங்கு என்பதால் இதனைக் கடல் பசு என்கின்றனர். மீனவர்கள் இதனை ஆவுளியா என்கின்றனர். இதன் விலங்கியல் பெயர் டகாங் டகான் (Dugong dugon) என்பதாகும். இதனை அந்தமான் மற்றும் நிக்கோபர் மாநிலத்தின் விலங்காக அறிவித்துள்ளனர். இந்த கடல் பசுக்கள் 3 மீட்டர் நீளமும், 400 கிலோ எடை என்கிற அளவிற்கு வளர்ச்சி பெரும். சுமார் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழும். கடலில் உள்ள தாவரங்களை மட்டுமே உண்ணும். மேலும் தாவரங்களின் வேர்களையும் உண்ணும். ஒரு நாளைக்கு சுமார் 45 கிலோ எடை கொண்ட தாவரங்களைச் சாப்பிடும். பிறந்த குட்டியானது 3 அடி நீளமும் 30 கிலோ எடையும் கொண்டிருக்கும். இது 6 நிமிடத்திற்கு ஒரு முறை நீர் மட்டத்திற்கு வந்து மூச்சுவிட்ட பிறகு மீண்டும் கடலுக்குள் செல்லும். இதற்கு முதுகு துடுப்பு இல்லாத காரணத்தால் தண்ணீருக்கு வெளியே தாவ முடியாது. கடல் பசுவின் இறைச்சி சுவை மிக்கது. ஆகவே இதனை அதிகம் வேட்டையாடுகின்றனர். எண்ணெய், இறைச்சி, தோல் போன்றவற்றிற்காக இதனைப் பிடிக்கின்றனர். இதன் தோலை் உரித்து செருப்பு செய்கின்றனர். மருந்திற்குப் பயன்படுகிறது எனக் கூறி இதனை அதிகம் வேட்டையாடுகின்றனர். இதனால் இவ்விலங்கு மிக வேகமாக அழிந்து வருகிறது. இதனைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுப்பட்டு வருகிறது.

பவளப் பாறை வகைகள்

Thumb
மனித மூளைப் பவளம்

பவளப்பாறைகளில் பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றிற்கு அமைப்பு மற்றும் தோற்றத்தின் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளது. அவற்றில் விரல் பவளம், தட்டு பவளம், காளான் பவளம், மான் கொம்பு பவளம், மூளைப்பவளம் என்பவை முக்கிய வகைகளாகும். மேலும் நீலக் கோரல், சிவப்புக் கோரல், பயர் கோரல், ஹெல்மெட் கோரல், மார்பிள் கோரல், போல்டர் கோரல் போன்றவையும் உள்ளன. விரல் பவளம் என்பது கைவிரல் போன்ற அமைப்பு கொண்டது. தட்டு பவளம் (Plate coral) என்பது பல தட்டுகள் போல் இருக்கும். காளான் பவளம் என்பது காளான் (Mushroom) வடிவைக் கொண்டது. மான் கொம்பு (Staghorn) பவளம் என்பது பல கிளைகளைக் கொண்டது. பார்ப்பதற்கு மானின் கொம்பு போன்ற வடிவத்தில் தெரியும். இவை உடைந்தால் கூட மீண்டும் கிளை விட்டே வளரும். மூளைப் பவளம் (Brain coral) மிக அழகானது. ஆச்சரியமான வடிவம் கொண்டது. பார்ப்பதற்கு மனிதனின் மூளை போன்ற தோற்றமுடையது.

நிபா பனை

Thumb
Nypa fruticans

நிபா என்னும் பனை மட்டுமே சதுப்பு நிலத்தில் வளர்கிறது. இது மாங்குரோவ் காடுகளில் மட்டுமே வாழ்கிறது. ஆகவே இதனை மாங்குரோவ் பனை (Mangrove palm) என அழைக்கின்றனர். நிபா என்னும் பேரினத்தில் புருட்டிகேன்ஸ் (Nypa fruticans) என்னும் சிற்றினம் மட்டுமே உள்ளது. இது அரிதான பனை. அந்தமான் தீவுகளின் கடற்கரை ஓரங்களில் உள்ள சதுப்பு நிலத்தில் இதனைக் காணலாம். இதன் மரப்பகுதி சேற்றில் புதைந்துள்ளது. மிருதுவான சேற்றில் இது காணப்படுகிறது. இதன் இலை கீற்று 30 அடி நீளம் கொண்டது. இதில் இருந்து எத்தனால் தயாரிக்கிறார்கள். இதன் கீற்று கூரை மேயவும், கூடைகள் பின்னவும் பயன்படுகிறது. பதநீரைக் கொண்டு இனிப்பு வகைகளும் செய்கின்றனர்.[4]

Remove ads

இவற்றையும் காண்க

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads