வேட்டையாடுதல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வேட்டையாடுதல் (Hunting) வாழும் உயிர்களை, குறிப்பாக காட்டு விலங்குகளை, உணவு, மகிழ்ச்சி, வியாபாரம் போன்றவற்றிற்காக பிடிப்பது மற்றும் கொலை செய்வது ஆகும். இச்செயலை மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் செய்கின்றன.[1] வியாபாரப் பொருட்களுக்காக வேட்டையாடப்படும் உயிரினங்களின் பொருட்கள் நாடு கடத்தப்படுவது குற்றம் என அரசு சட்டங்கள் தெரிவிக்கின்றன, பன்னெடுங்காலமாக தமிழ் அரசர்கள் வேட்டையாடியதைப் பற்றி இலக்கியங்கள் கூறுகின்றன. அழிவில் இருக்கின்ற விலங்குகளை வேட்டையாடுதல் தொடர்பான சட்டங்கள் பல நாடுகளில் இயற்றப்பட்டுள்ளன. இந்து சமய புராணங்கள் அரசர்கள் வேட்டையாடுதலை பொழுதுபோக்காகக் கொண்டிருந்தனர் எனக் கூறுகின்றன.

வேட்டையாடுதலுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. நம் முன்னோர்களுக்கும் முந்தைய ஆதி மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடி இறைச்சி உண்கின்ற போது ஆரம்பித்ததன் பழக்கம் இன்று வரை இருக்கலாம். பெரிய விலங்குகளிடம் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள ஆரம்பித்த இப்பழக்கம் பின்னர் உணவுப் பழக்கமாகவும் மாறி இருக்கலாம். நாகரிகம் அடைந்து சமவெளிகளில் குடியேறுவதற்கு முன்னரும், விவசாய நிலங்களை உருவாக்கிப் பயிரிடுதலைக் கற்றுகொள்வதற்கும் முன்னர் வேட்டையாடுதல் உணவளிக்கும் ஒரு செயலாய் இருந்து வந்தது.[2]

Remove ads

வேட்டையாடுதலில் பயன்படும் கருவிகள்

கற்காலத்தில் கற்களைக் கூர்மைப் படுத்தி ஆயுதங்கள் தயாரித்து அதைக் கொண்டு விலங்குகளை வேட்டையாடினர். மேலும் , இறந்த விலங்குகளின் கூரிய எலும்புகளைக் கொண்டும் வேட்டைக்கான ஆயுதங்களைத் தயாரித்தனர். உலோகங்களின் கண்டுபிடிப்பிற்குப் பின்னர் இரும்பால் ஆன கூறிய ஆயுதங்களை வேட்டைக்குப் பயன்படுத்தினர். கூர்மையான ஈட்டி, வில் அம்புகள், நீண்ட கத்திகள் முதலிய ஆயுதங்கள் விலங்குகளைத் தாக்கப் பயன்படுத்தப்பட்டன. நவீன உலகத்தில் வெடி மருந்துகளும், துப்பாக்கிகளும் வேட்டையாடப் பயன்படுத்துகின்றனர்.[2][3]

வேட்டைக் கருவி
Remove ads

வேட்டையாடுதலின் நோக்கங்கள்

உணவுக்கு

பண்டைக் காலத்தில் இருந்து உணவுக்காக வேட்டையாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பயிரிட்டு உண்ணும் வழக்கம் தொடங்கும் வரையில் உணவுக்கான முதன்மை செயற்பாடாக வேட்டையாடுதலே காணப்பட்டது.

உணவுக்காக மான், மரை, மாடு, பன்றி, முயல் முதலான விலங்குகள் பொதுவாக வேட்டையாடப்படுகின்றன.[4]

பொழுது போக்குக்கு

பண்டைக் காலத்தில் மன்னர்கள் பொழுதுபோக்குக்காகவும், தனது வீரத்தை மெய்ப்பிப்பதற்கும் வேட்டையாடுதலை மேற்கொண்டனர். குறி பார்த்து சுடும் அல்லது ஆயுதங்களைக் கையாளும் திறனை பரீட்சிப்பதற்கும் வேட்டையாடுதல் மேற்கொள்ளப்பட்டது.

கொம்பு, பல், தோல், உரோமம் பெறுவதற்கு

  • கொம்பு பெறுவதற்கு மான் முதலான விலங்குகள்
  • பல் பெறுவதற்கு யானை, புலி, முதலான விலங்குகள்
  • தோல் பெறுவதர்கு மான், புலி முதலான விலங்குகள்
  • உரோமம் பெறுவதற்கு செம்மறியாடு முதலான விலங்குகள்
Remove ads

வேட்டையாடுதலுக்காக மற்றைய விலங்குகளைப் பழக்குதல்

பல்வேறு விலங்குகளை வேட்டையாட மனிதன் முன்பு பயன்படுத்தி இருந்தாலும் கூட, யாதும் நாய் போன்ற முக்கியமான பங்கு வகிக்கவில்லை. வேட்டை நாய்கள், விலங்குகள் எங்கு மறைந்து இருக்கின்றன என்பதைக் கண்டறியவும், அவற்றைத் துரத்தவும் மற்றும் சில நேரங்களில் அவ்விலங்குகளைக் கொல்லவும் பயன்படுத்தப்படுகின்றன. வேட்டை நாய்கள் மனிதர்களை வேட்டையாடுவது மிகவும் அரிதானதாக இருப்பினும், இரையைத் தொடர மற்றும் கொல்ல அவற்றை அனுமதிப்பது ஆபத்தானது என்றே கூறப்படுகிறது. பல்வேறு இன நாய்கள், பல்வேறு வகையான வேட்டையாடுதலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக, நீர்நிலைப் பறவைகள் லாப்ரடர் ரெட்ரீவர், கோல்டன் ரெட்ரீவர், சேஸபீக் பே ரெட்ரீவர், பிரிட்டானி ஸ்பானியல், மற்றும் இத்தகைய இன நாய்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி வேட்டையாடப்படும்.[5][6]

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads