நிக்கல்(II) நைட்ரேட்டு

வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia

நிக்கல்(II) நைட்ரேட்டு
Remove ads

நிக்கல்(II) நைட்ரேட்டு (Nickel(II) nitrate) என்பது Ni(NO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதைத் தவிர வேறு சில நிக்கல்(II) நைட்ரேட்டு நீரேற்றுகளும் அறியப்படுகின்றன. நிக்கல்(II) நைட்ரேட்டு அறுநீரேற்றில் நைட்ரேட்டு அயனிகள் நிக்கலுடன் பிணைக்கப்பட்டிருக்காது. Ni(NO3)2.9H2O, Ni(NO3)2.4H2O, and Ni(NO3)2.2H2O. ஆகிய நீரேற்றுகளும் அறியப்படுகின்றன.[3]

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

தயாரிப்பு

நிக்கல் ஆக்சைடுடன் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் நிக்கல்(II) நைட்ரேட்டு உருவாகிறது.

NiO + 2 HNO3 + 5 H2O → Ni(NO3)2.6H2O

நீரற்ற நிக்கல் நைட்ரேட்டை பொதுவாக நீரேற்றுகளை சூடாக்குவதன் மூலம் தயாரிக்க முடிவதில்லை. மாறாக நீரேற்றுடன் டைநைட்ரசன் பெண்டாக்சைடு அல்லது டைநைட்ரசன் டெட்ராக்சைடுடன் நிக்கல் கார்பனைலை சேர்த்து வினைபுரியச் செய்தால் நீரிலி நிலை நிக்கல்(II) நைட்ரேட்டு உருவாக்கப்படுகிறது.

Ni(CO)4 + 2 N2O4 → Ni(NO3)2 + 2 NO + 4 CO

நீரேற்றப்பட்ட நைட்ரேட்டு பெரும்பாலும் நிக்கல் வினையூக்கிகளுக்கு முன்னோடியாகப் பயன்படுத்தப்படுகிறது.

Remove ads

கட்டமைப்பு

ஆக்சிசனேற்றப்பட்ட ஈந்தணைவிகள் கொண்ட நிக்கல்(II) சேர்மங்கள் பெரும்பாலும் எண்முக ஒருங்கிணைப்பு வடிவவியலைக் கொண்டுள்ளன. இரண்டு பல்லுருவ நான்குநீரேற்றுகள் (Ni(NO3)2.4H2O) படிகமாக்கப்பட்டுள்ளன. ஒரு நான்குநீரேற்றில் ஈதல்பிணைப்பு நைட்ரேட்டு ஈந்தணைவிகள் மாறுபக்கத்திலும் [4] மற்றொன்றில் அவை சிசு எனப்படும் அதேபக்கத்திலும் காணப்படுகின்றன.[5]

பயன்

நிக்கல்(II) நைட்ரேட்டு முதன்மையாக உலோக நிக்கலின் மின்முலாம் பூசவும் மற்றும் மின்னச்சுத் தகடுகளாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பன்முக வினையூக்கத்தில், நிக்கல் (II) நைட்ரேட்டு அலுமினாவை செறிவூட்ட பயன்படுத்தப்படுகிறது. வெப்பச்சிதைவின் போது விளையும் பொருள்களில் இரானே நிக்கல் மற்றும் உருசிபரா நிக்கல் வடிவங்கள் கிடைக்கின்றன.[6] ஒரே மாதிரியான வினையூக்க வினையில் அறுநீரேற்று குறுக்கு இணைப்பு வினைகளுக்கு ஒரு முன் வினையூக்கியாகும்.[7]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads