நிக்கெலோடியன் இந்தியா

From Wikipedia, the free encyclopedia

நிக்கெலோடியன் இந்தியா
Remove ads

நிக்கலோடியோன் அல்லது நிக் என்பது வயாகாம் 18 நிறுவனத்தின் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை ஏப்ரல் 23, 1999 ஆம் ஆண்டு முதல் மகாராட்டிரம் மாநிலத்தில் மும்பை நகரை தலைமையிடமாக கொண்டு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் மராத்தி போன்ற இந்திய மொழிகளில் இயங்கி வருகின்றது. இந்தியாவில் அக்டோபர் 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி அதிகம் பார்க்கப்பட்ட குழந்தைகள் தொலைக்காட்ச்சியாக இந்த அலைவரிசை உள்ளது.[1]

விரைவான உண்மைகள் நிக்கெலோடியன் இந்தியா, ஒளிபரப்பு தொடக்கம் ...
Remove ads

வரலாறு

நிக்கலோடியோன் அலைவரிசை ஆசியாவில் ஒரு பகுதியாக அக்டோபர் 16, 1999 அன்று இந்தியாவில் ஆங்கில மொழியில் தொடங்கப்பட்டது. வயாகாம் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் செயற்கைக்கோள் நிர்வாகிகளுக்கு தொலைக்காட்சி விநியோகிக்கும் பொறுப்பை ஜீ தொலைக்காட்சி கொண்டிருந்தது.[2] மேலும், ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் நிக்கலோடியோன் நிகழ்ச்சிகள் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.[3]

பின்னர் 2004 ஆம் ஆண்டில் வயாகாம் நிறுவனம் மூலம் நிக்கலோடியனைப் புதுப்பித்து, பார்வையாளர்களை அதிகரிக்கச் செய்வதற்காக பல உள்ளூர் நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்பு செய்து வந்தது. மேலும் இந்த ஆண்டே இந்தி மொழியில் தனது ஒளிபரப்பை தொடங்கியது. மற்றும் நிக்கலோடியன் என்ற பெயரை சுருக்கி 'நிக்' என்று அழைக்கப்பட்டது.

வயாகாம் நிறுவனம் 2007 இல் சன் டிவி நெட்வொர்க்குடன் ஒரு நிரலாக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, அதன்படி நிக்கலோடியோன் நிகழ்ச்சிகள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒலிச்சேர்க்கை செய்யப்பட்டு சுட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என அறிவித்தது. பின்னர் நிக்கலோடியன் அவர்களின் சொந்த அலைவரிசையிலே தமிழ் மற்றும் தெலுங்கு ஒலிச்சேர்க்கையை இணைக்க முடிவு செய்தபோது இந்த ஒப்பந்தம் பின்னர் ரத்து செய்யப்பட்டது.[4]

2007 இல் வயாகாம் மற்றும் டிவி18 இடையேயான ஒப்பந்தத்தின் படி வயாகாம் 18 என்ற கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டது, மேலும் எம்டிவி இந்தியா, நிக் இந்தியா மற்றும் விஎச்1 இந்தியா போன்ற அலைவரிசைகள் இந்த புதிய நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாறியது.[5] ஜூன் 25, 2010 அன்று அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சின்னத்தை பயன்படுத்தி நிக் இந்தியா என்று மறுபெயரிடப்பட்டு தனது சேவையை புதுப்பொலிவுடன் தொடங்கியது.[6]

2011 இல் வயாகாம் 18 சோனிக் என்ற புதிய அதிரடி மற்றும் சாகசம் சார்ந்த அலைவரிசையை அறிமுகப்படுத்தியது. பின்னர் 2016 இல் நகைச்சுவை தொலைக்காட்சியாக தன்னை மாற்றிக்கொண்டது. டிசம்பர் 5, 2015 அன்று வயாகாம் 18 நிறுவனம் இந்தியாவில் முதல் சிறுவர்களுக்கான உயர் வரையறு தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியது.[7]

இந்த அலைவரிசையில் செப்டம்பர் 1, 2018 அன்று கன்னட மொழியில் ஒலிச்சேர்க்கை இணைக்கப்பட்டது. பின்னர் குஜராத்தி, வங்காளம், மலையாளம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் நான்கு கூடுதல் மொழி இணைப்புகள் 2020 இல் சேர்க்கப்பட்டன.[8]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads