நிசாம் கல்லூரி

தெலங்காணாவின் ஐதராபாத்திலுள்ள ஒரு கல்லூரி From Wikipedia, the free encyclopedia

நிசாம் கல்லூரி
Remove ads

நிசாம் கல்லூரி (Nizam College) என்பது உசுமானியா பல்கலைக்கழகத்தின் ஒரு தொகுதி கல்லூரியாகும். இது 1887ஆம் ஆண்டில் தெலங்காணாவின் ஐதராபாத்தில் உள்ள பசீர்பாக் நகரில் மிர் மஹபூப் அலி கான், ஆறாம் அசாப் ஜா காலத்தில் நிறுவப்பட்டது.

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Remove ads

வரலாறு

Thumb
நிசாம் கல்லூரியின் தற்போதையத் தோற்றம்

நிசாம்பூர் பல்கலைக்கழகக் கல்லூரி முதலில் நவாப் இரண்டாம் சப்தார் ஜங் முஷீர்-உத்தௌலா பக்ருல்-உல்-முல்க்கின் "கோடைகால அரண்மனை" ஆகும். பகர் உல் முல்க் மற்றும் இரண்டாம் கான்-இ- கானன் , ஐதராபாத்தின் ஒரு உன்னதமான நவாப் முதலாம் பக்கர்-உல்-முல்க்கின் மகன் ஆவார். [1]

ஐதராபாத் மாநிலத்தில் கல்லூரி மற்றும் பல கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சையத் உசேன் பில்கிராமி (நவாப் இமது-உல்-முல்க்) என்பவராவார். இவர் கல்வித் துறையில் இயக்குநராக இருந்து பல முன்னோடிப் பணிகளைச் செய்தார். இவர் பல தவல்களை சேகரித்து பின்னர் மருத்துவர் அகோரநாத் சட்டோபாத்யாயை (இந்தியாவின் நைட்டிங்கேல் சரோஜினி நாயுடுவின் தந்தை) கல்லூரியின் முதல் முதல்வராக நியமித்தார். தற்போதைய கட்டிடம், பைகா நவாப் முல்க் பக்ருல் பகதூரின் கோடைகால அரண்மனையாக இருந்தது. பின்னர் நவாப் அரண்மனையை கல்லூரி நிர்வாகத்திற்கு பரிசளித்தார். [2] [3]

Remove ads

நிறுவனம்

இந்த கல்லூரி உசுமானியா பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி, தொகுதி கல்லூரி ஆகும். இது ஐதராபாத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி விளையட்டு மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ளது. நிசாம் கல்லூரி முதலில் ஐதராபாத்தின் உன்னதமான இரண்டாம் பக்ருல் உல் முல்க்க்கின் அரண்மனையாக இருந்தது. [4]

உசுமானியா பல்கலைக்கழகத்தின் முதன்மைக் கல்லூரிகளில் ஒன்றான நிசாம் கல்லூரி 1987ஆம் ஆண்டில் அதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது. இந்த கல்லூரி தெலங்காணா மாநிலத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலும் உயர்கல்வியின் மிகப் பழமையான மற்றும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாகும். இது 1887ஆம் ஆண்டில் ஐதராபாத் பள்ளி (நோபல் பள்ளி) மற்றும் மதர்சா-ஐ-அலியா ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் இது சென்னைப் பல்கலைக்கழகத்துடன் 60 ஆண்டுள் இணைக்கப்பட்டிருந்தது. 1947 பிப்ரவரி 19 அன்று உசுமானியா பல்கலைக்கழகத்தின் ஒரு கல்லூரியாக மாற்றப்பட்டது. [5]

அதன் தொடர்ச்சியான உயர் கல்வி செயல்திறன் மற்றும் நீண்டகால பார்வையின் அடிப்படையில், கல்லூரிக்கு 1988-89ஆம் ஆண்டில் இளங்கலை மட்டத்தில் பல்கலைக் கழக மான்ய குழுவால் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. மேலும் இந்த நிலையை தொடர்ந்து அனுபவித்து வருகிறது. இது தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார அமைப்பின் அங்கீகாரம் பெற்றது. மேலும் பல்கலைகழக மான்யக் குழுவால் சிறந்த திறனுக்கான கல்லூரிக்கான மானியம் வழங்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு அதன் சொந்த கல்வி அமைப்புகள் உள்ளன. அதாவது, ஆளும் குழு, கல்வி அமைப்பு, நிதிக் குழு, உள் தர உத்தரவாதக் கல மற்றும் ஒவ்வொரு வாரியத்திற்கும் அதன் கல்வி, நிதி மற்றும் பிற நடவடிக்கைகளை உரிய அதிகாரிகளின் திருப்திக்கு தேவையான அளவிற்கு கண்காணிக்க போன்ற அமைப்புகள். [6]

மேலாண்மை, கலை மற்றும் சமூக அறிவியல், அறிவியல் மற்றும் வணிகவியல் துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை கல்லூரி வழங்குகிறது. தற்போது கல்லூரியில் 29 கற்பித்தல் துறைகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு மேலதிகமாக, பல மாணவர்கள் தங்களது முனைவர் மற்றும் பிந்தைய முனைவர் திட்டங்களைத் தொடர்கின்றனர்.

Remove ads

குறிப்பிடத்தக்க பழைய மாணவர்கள்

மேலும் காண்க

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads