நித்தியானந்த சுவாமி (அரசியல்வாதி)

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

நித்தியானந்த சுவாமி (Nityanand Swami) (Hindi: नित्यानन्द स्वामी; (27 டிசம்பர் 1927 - 12 டிசம்பர் 2012) உத்தராகண்ட் மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக 9 நவம்பர் முதல் 29 அக்டோபர் 2001 முடிய பதவி வகித்தவர்.[1]

விரைவான உண்மைகள் நித்தியானந்த சுவாமிनित्यानन्द स्वामी, முதலாவது முதலமைச்சர் (இந்தியா ...
Remove ads

இளமையும் கல்வியும்

நித்தியானந்த சுவாமி அரியானாவில் உள்ள நர்னௌலி என்ற ஊரில் பிறந்தவர் எனினும், அவரது தந்தை டேராடூனில் வன ஆராய்ச்சித் துறையில் பணியாற்றி வந்ததால், டேராடூனில் கல்வியைத் தொடர்ந்தார். சட்டப் படிப்பு பயின்ற நித்தியானந்த சுவாமி, ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கப் பணிகளில் ஈடுபட்டார்.

அரசியல் வாழ்க்கை

நித்தியானந்த சுவாமி பாரதிய ஜனசங்க கட்சியின் உறுப்பினராகச் சேர்ந்து அரசியல் பணி தொடர்ந்தார்.

  • 1969-இல் டேராடூன் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1984-இல் கார்வால் மற்றும் குமாவுன் பட்டதாரிகள் தொகுதிலிருந்து உத்தரப் பிரதேச மேலளவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1991-இல் பாரதிய ஜனதா கட்சி ஆண்ட உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு துணைத்தலைவராகவும், பின்னர் 1992-இல் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உத்தரப் பிரதேசத்திலிருந்து உத்தராஞ்சல் பகுதியை பிரித்து தனி மாநிலமாக உருவாவதற்கு தொடர்ந்து பாடுபட்டவர்.

  • 9 நவம்பர் 2000-இல் புதிய உத்தராஞ்சல் (தற்போது உத்தராகண்ட்) மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக பாரதிய ஜனதா கட்சியின் நித்தியானந்த சுவாமி பதவி ஏற்றார். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 29 அக்டோபர் 2001-இல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads