பகத்சிங் கோசியாரி
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பகத்சிங் கோசியாரி (Bhagat Singh Koshyari) (இந்தி: भगत सिंह कोश्यारी) (பிறப்பு: 17 சூன் 1942) இந்திய அரசியல்வாதியும், உத்தராகண்ட் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரும், உத்தராகண்ட் மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சரும் ஆவார். இராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உறுப்பினரான பகத் சிங் கோசியாரி, பாரதிய ஜனதா கட்சியி தேசியத் துணைத் தலைவராகவும், உத்தராகண்ட் மாநில பாரதிய ஜனதா கட்சியின் முதல் மாநிலத் தலைவராகவும் பணியாற்றியவர்.
மேலும் உத்தராகண்ட் மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராக 2001 முதல் 2002 முடியவும், பின்னர் 2002 முதல் 2007 முடியவும் பதவியில் இருந்தவர். 2008 முதல் 2014 முடிய இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 16 மே 2014-இல் பதினாறாவது மக்களவைக்கு, நைனிடால்-உதம்சிங் நகர் மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
Remove ads
பிறப்பும் இளமையும்
கோபால் சிங் கோசியாரி – மோதிமா தேவி இணையருக்கு 17 சூன் 1942-இல் பாலனதுரா சேத்தப்கர், பாகேஸ்வர் மாவட்டம், உத்தராகண்ட் மாநிலத்தில் பிறந்தவர் பகத் சிங் கோசியாரி.[1]
அல்மோரா கல்லூரியில் ஆங்கில மொழி முதுநிலை பட்டம் பெற்ற பகத் சிங் கோசியாரி, கல்லூரி ஆசிரியராகவும், ஊடகவியல் துறையிலும் பணியாற்றியவர்.
அரசியல்
இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலை காலத்தில், மிசா சட்டத்தில் பகத் சிங் கோசியாரி கைது செய்யப்பட்டு அல்மோரா மற்றும் பதேகர் சிறைகளில் சூலை 1975 முதல் மார்ச் 1977 முடிய சிறையில் இருந்தவர்.[1]
மே 1977-இல் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2000-இல் புதிதாக நிறுவப்பட்ட உத்தராஞ்சல் மாநிலத்தின் எரிசக்தி, நீர்பாசானம் மற்றும் சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
நித்தியானந்த சுவாமிக்குப் பின்னர், 30 நவம்பர் 2001 முதல் 1 மார்ச் 2002 முடிய உத்தராகண்ட் மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராக 30 நவம்பர் 2001 முதல் 1 மார்ச் 2002 முடிய பணியாற்றியவர்.[2]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads